இந்தோனீசியாவில் காட்டுத் தீ இடங்கள் குறைந்தும் தொடரும் புகைமூட்டம்

இந்தோனீசியாவில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் குறைவான காட்டுத் தீ இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளபோதிலும் அவற்றால் ஏற்படும் புகைமூட்டம் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து பிரச்சினையாக விளங்குவதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார். புகைமூட்டப் பிரச்சினையை வேரோடு களைய காட்டுத் தீ ஏற்படும் சாத்தியத்தை முழு மையாக தடுப்பதே ஒரே வழி என்றும் இந்த இலக்கை அடைய கூடுதல் முயற்சிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். தெம்பனிஸ் வட்டாரத்தில் நேற்று நடைபெற்ற சமூகச் சுற்றுச்சூழல் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், புகை மூட்டப் பிரச்சினை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

காட்டுத் தீ இடங்களைக் குறைக்கவும் புகைமூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும் இந்தோனீசிய அதிகாரிகள் மேற்கொள்ளும் தீவிர முயற்சி சிங்கப்பூருக்கு மகிழ்ச்சியைத் தருவதாகத் திரு மசகோஸ் கூறினார். ஆனாலும் புகை மூட்டப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க காட்டுத் தீ ஏற்படுவதை முழுமையாகத் தடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூரின் காற்றுத் தரம் நேற்று முன்தினம் இவ்வாண்டில் முதல்முறையாக ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. மேற்குத் திசையிலிருந்து வீசும் காற்று சுமத்ராவில் கொழுந்து விட்டு எரியும் காடுகளிலிருந்து கிளம்பும் புகையை சிங்கப் பூருக்குக் கொண்டு வருவதே இதற்குக் காரணம்.

"இந்தோனீசீய அதிகாரிகள் எடுத்து வரும் முயற்சிகளால் கடந்த ஆண்டைவிட இவ் வாண்டில் காட்டுத் தீ இடங் களின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்துள்ளது. ஆனால் காட்டுத் தீ இடங்கள் குறைவாக இருந்தாலும் போதுமான காற் றாலும் புகையாலும் காற்றின் தரம் நீண்டகாலத்துக்குப் பாதிப்படையலாம் என்பது நிரூபணமாகி உள்ளது," என்று திரு மசகோஸ் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!