‘ஸிக்கா’ எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று காலை பாய லேபார் வே, காலாங் வே வட்­டா­ரங்களில் பூச்­சிக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்கை­களை மேற்­கொண்டது. உள்­ளூ­ரில் 'ஸிக்கா'கிரு­மித் தொற்­றுக்கு இலக்­கா­ன­தாக முன்­தி­னம் உறுதி செய்­யப்­பட்ட 26 பேரில் ஐவர் இவ்­விரு வட்­டா­ரங்களில் வாழ்ந்த­வர்­கள் அல்லது வேலை செய்­த­வர்­கள். கொசு இனப்­பெ­ருக்­கம் செய்­யக்­கூ­டிய இடங்களை அழிக்க வாரிய அதி­கா­ரி­களும் குத்­தகை­யா­ளர்­களும் பாய லேபார் வே கட்­ட­டம் 120ன் சுற்­று­வட்­டா­ரத்­தில் பூச்­சிக்­கொல்லி மருந்த­டித்­த­னர். அப்­ப­கு­தி­யி­லி­ருந்த சாக்­கடை­களில் பூச்­சிக்­கொல்லி மருந்­துப்­பொடி தூவப்­பட்­டது. கொசுக்­களைத் துடைத்­ தொ­ழிக்க அப்­ப­கு­தி­யி­லி­ருந்த வீடு­களுக்­கும் அவர்­கள் வருகை­ய­ளித்­த­னர். பாய லேபார் வே கட்­ட­டம் 121ல் குடி­யி­ருக்­கும் 58 வயது மெல்­வின் சுவா, அக்­கம்பக்­கத்­தில் வாழும் நலி­வுற்ற முதி­யோ­ரின் நலன் குறித்து அக்­கறைப்­படு­வ­தா­கக் கூறினார்.

ஸிக்கா தொற்று ஆரம்பத்­தில் பர­விய அல்­ஜுனிட் கிர­சன்ட், சிம்ஸ் டிரைவ் வட்­டா­ரங்களுக்கு அப்­பால் பாய லேபார் வேயி­லும் இப்­போது பர­வி­யி­ருக்­கிறது. கொசுக்­க­ளால் பரப்­பப்­படும் ஸிக்கா பொது­வாக அதிக பாதிப் பை ஏற்­படுத்­தாது. ஆனால், கர்ப்­ப­மாக இருக்­கும்­போது ஸிக்கா தொற்­றினால், கரு­வி­லேயே குறை­பாடு­கள் ஏற்­ப­டக்­கூடும். நேற்றைய பூச்­சிக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்கை­களை சுற்­றுப்­புற, நீர்­வள, சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் பார்வை­யிட்­டார். ஸிக்கா தொற்றைத் தடுக்­கக்­கூ­டிய வழி­வகை­களை வய­தான குடி­யி­ருப்­பா­ளர்­களி­டம் தெரி­யப்­படுத்­த­வும் அவர் உத­வினார். இந்த வட்­டாரத்­தில் ஏற்கெ­னவே டெங்­கி பர­வல் இருப்­ப­தாக டாக்­டர் கோர் தெரி­வித்­தார். ஆகஸ்ட் 24ஆம் தேதி­யி­லி­ருந்து பூச்­சிக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்கை­கள் தீவி­ர­மாக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!