பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறந்துவிடக் கோரி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவிலும் தமிழகத்திலும் வெடித்த வன்முறை இன்னும் முடிவுக்கு வராததால் தொடர்ந்து பதற்ற நிலை நீடிக்கிறது. மைசூரு, மாண்டியாவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரிலும் வன் முறை கட்டவிழ்த்து விடப்பட்டதால் அங்கு நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தத் தடை உத்தரவு இன்று இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வாகனங்களைக் கன்னட அமைப்பு களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் கொளுத்தினர். தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவ னங்களையும் அவர்கள் தாக்கிச் சேதப்படுத்தினர். அவர்களின் உச்சகட்ட வெறி யாட்டமாக சேலத்தைச் சேர்ந்த கே.பி.நடராஜ் என்பவருக்குச் சொந்தமான 'கேபிஎன் டிராவல்ஸ்' தனியார் பேருந்து நிறுவனத்தின் 56 பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

தகவல் தெரிவித்து இரண்டு மணி நேரத்திற்குப்பின் சாவகாசமாக போலிசார் வந்ததாகவும் அதற்குள் எல்லாப் பேருந்துகளும் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தன என்றும் தெரிவிக் கப்பட்டது. இதனால் அந்த நிறு வனத்திற்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எஸ்ஆர்எஸ் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சில பேருந்துகளும் எரிக்கப்பட்டன. நேற்றும் இரு தமிழக லாரிகள் அங்கு தீக்கிரையாக்கப்பட்டன. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு போலிஸ் வாகனத்திற்குத் தீ வைக்க முயன்ற கும்பலைக் கலைப்பதற்காக போலிசார் துப்பாக் கியால் சுட்டனர். அதில், உமேஷ், 25, என்ற இளையர் பலியானார். பலியான உமே‌ஷின் குடும்பத்தா ருக்குப் பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பெங்களூரு முழுவதும் சுமார் 15,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், பெங்களூரு நகரமே அறிவிக்கப்படாத முழு அடைப்புப் போராட்டம் நடந்ததுபோல் காட்சி அளித்தது. மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. சில பகுதிகளில் மட்டும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கர்நாடக=தமிழக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் ஏராளமான துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மத்திய அரசின் வன் முறைக் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த 700 போலிசாரும் நேற்று கர்நாடகா விரைந்தனர். மாண்டியாவில் தமிழ்ப் பத்திரிகைகளை எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது. அங்கும் பேருந்துப்போக்குவரத்து முடங்கியது. மைசூரு, சாம்ராஜ் நகர், கோலார் ஆகிய இடங்களில் இருந்தும் தமிழகத்திற்குப் பேருந்துகள் இயக் கப்படவில்லை. அதேபோல தமிழகத்திலிருந்தும் கர்நாடகாவிற்குப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே, போலிசார் லத்தியால் தாக்கியதால் காயமடைந்த குமார், 30, என்ற இளையர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!