‘தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்’ முறை: அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை தொடர்பான அரசமைப்புச் சட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றைக் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான தனது விரிவான விளக்கத்துடன் கூடிய 48 பக்க வெள்ளை அறிக்கையை அரசாங் கம் நேற்று வெளியிட்டது. அதிபர் பதவிக்குப் போட்டியிட விரும்பும் தனியார் துறையைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி நிலை, பங்குதாரர்களின் பங்கா கக் குறைந்தது $500 மில்லி யனைக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று மாற்றப்படு கிறது. இப்போதைய விதிகளின் படி, அவர்கள் குறைந்தது $100 மி. செலுத்திய மூலதனத்தைக் கொண்ட நிறுவனத்தின் தலை வராக அல்லது தலைமை நிர் வாகியாக இருந்தால் போதும், அவரால் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியும் என்றுள்ளது.

ஆயினும், பொதுத் துறை அல்லது தனியார் துறை நிறு வனத்தில் குறைந்தது ஆறு ஆண்டுகள் அவர்கள் தலைமைப் பதவியில் இருந்திருக்கவேண் டும் என்ற ஆணைக்குழுவின் பரிந்துரையை ஏற்க அரசாங்கம் மறுத்துவிட்டது. இப்போதிருப்பதைப் போல அவர்கள் மூன்று ஆண்டுகாலம் தலைமைப் பதவியில் இருந்தால் போதுமானது என்று அரசாங் கத்தின் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், வேட்பாளரின் தகுதிக் காலம் தேர்தலுக்கு முந்திய 15 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும் என்ற பரிந் துரை, குறைந்தபட்சம் தகுதிக் காலத்தின் ஒரு பகுதியாவது தேர்தலுக்கு முந்திய 20 ஆண்டு களுக்குள் இருக்கவேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. அதிபர் வேட்பாளர் தகுதி வரம்புகளில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ள நிலையில், ‘கவனமான அணுகுமுறை’ கையாளப்பட்ட தாக வெள்ளை அறிக்கை தெரிவித்தது. அப்படிச் செய்வதன் மூலம், தகுதியான வேட்பாளர்கள் அதிக அளவில் இருப்பதை உறுதி செய்யலாம் என்றும் தெரி விக்கப்பட்டது.

Loading...
Load next