டெங்கியை கண்டுபிடிக்கும் புதிய சாதனம்

டெங்கி காய்ச்சல் இருந்தால் அதை 10 நிமிடங்களில் கண்டு பிடித்துவிடும் புதிய பரிசோதனை சாதனம் இன்னும் மூன்று ஆண்டு களில் சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கிறது. அந்தச் சாதனம் மூலம் 100% துல்லியமாக முடிவைத் தெரிந்து கொள்ளலாம். டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த தொற்றுநோய்ப் பிரிவு வல்லுநர் களும் சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியின் உயிர்மருத் துவ, உயிரின அறிவியல் நிலை யத்தின் மாணவர்களும் சேர்ந்து அச்சாதனத்தை உருவாக்கினர். டெங்கி காய்ச்சலை உருவாக் கும் நான்கு வகை கொசுக்களில் எந்த கொசு எந்த வகை காய்ச்ச லுக்கு காரணம் என்பதையும் புதிய சாதனம் கண்டுபிடிக்கும். டான் டோக் செங் மருத்துவ மனையும் சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியும் இவ்விவரங் களைத் தெரிவித்தன.

இந்தச் சாதனம் கடந்த 2013ல் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. அதுமுதல் இந்தச் சாதனம் சோதனைச்சாலையில் 24 மாதம் சோதிக்கப்பட்டது. சாதனத்தைச் சந்தையில் விற்பனைக்கு விடுவ தன் தொடர்பில் ஒரு நிறுனத்துடன் பேச்சு நடந்துவருவதாக இந்தக் கல்லூரி தெரிவித்துள்ளது. என்றாலும் இதற்கு குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று அது குறிப்பிட்டது. புதிய சாதனத்தின் விலை எவ்வளவு என்பதை இப்போதே தீர்மானித்துவிட முடியாது என்றும் இருந்தாலும் இதன் விலை போட் டித்திறன்மிக்கதாக இருக்கும் என்றும் இந்த இரு அமைப்பு களும் தெரிவித்துள்ளன. டெங்கி, ஸிக்கா இரண்டு நோய்களையும் மூன்று மணி நேரத்தில் சோதித்துக் கண்டறியக் கூடிய வேறொரு சாதனத்தை உருவாக்குவதன் தொடர்பில் இந்த இரு அமைப்புகளும் செயல் பட்டு வருகின்றன.

Loading...
Load next