மேம்பாலச்சாலை டாக்சி- வேன் விபத்தில் நால்வர் காயம்

தோ பாயோ நார்த் மேம்பாலச்சாலை யில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் நான்கு பேர் காயம் அடைந்தனர். அந்த விபத்தில் ஒரு டாக்சியும் ஒரு வேன் வாகனமும் சம்பந்தப்பட்டிருந்தன. தோ பாயோ லோரோங் 6 அருகே அந்த விபத்து நிகழ்ந்தது. அதன் விளைவாக பிராடல் ரோடு நெடுகிலும் அந்த மேம்பாலச் சாலையிலும் போக்குவரத்து அதிக மாகத் தேங்கியது.

தோ பாயோவுக்குச் செல்லும் பல சாலைகளைப் போக்குவரத்துப் போலிஸ் தற்காலிகமாக மூடியது. போக்குவரத்துத் தேக்கத்தில் மாட் டிக்கொண்ட பேருந்துகளிலிருந்து பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்ட தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் கள் தெரிவித்தனர். அந்தச் சம்பவம் பற்றி காலை 8.15 மணிக்குத் தனக்கு தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இரண்டு மருத்துவ வாகனங்களை உடனடி யாக அந்தப் படை அனுப்பியது. விபத்தில் காயம் அடைந்த நால்வரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இரு வருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.

மற்ற இரண்டு பேரில் ஒருவர் 50 வயதுக்கு மேற்பட்ட மாது. மற்றொருவர் 60 வயதுக்கு மேற்பட்ட ஆடவர். தங்களுக்கு முகத்திலும் மார் பிலும் வலிப்பதாக இருவரும் தெரி வித்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களில் மூவரில் டாக்சி யில் இருந்த இரண்டு பயணிகளும் டாக்சி ஓட்டியும் அடங்குவர்.

மேம்பாலச் சாலையில் ஒரு டாக்சியும் வேன் வாகன மும் விபத்துக் குள்ளானதில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து  குடிநுழைவு சோதனைச்சாவடிகளிலும் 2025ஆம் ஆண்டுக்குள் கைரேகை, முக அடையாளம், கண் ஆகியவற்றை 'ஸ்கேன்' செய்து தானியக்க குடிநுழைவு சோதனை முறை கடைப்பிடிக்கப்படும். கோப்புப்படம்

13 Nov 2019

அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் 2025க்குள் தானியக்க குடிநுழைவுச் சோதனை

போலிஸ் அலுவலக வளாகத்துக்குள் காலை 8.40 மணியளவில் நடந்து சென்ற ஓர் ஆடவர், அலுவலகம் ஒன்றின் முன்பாக வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது. படம்: இபிஏ

13 Nov 2019

போலிஸ் தலைமையகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி, அறுவர் காயம்

பிடோக் வட்டாரத்தில் இன்று மதியவாக்கில் புகைமூட்ட நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

சுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்