சிட்டி ஹார்வஸ்ட்: ‘ஆக மோசமான மோசடி’

சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தின் தலைவர்கள் மிக மோசமான மோசடி புரிந்துள்ளதாகவும் அவர் களுக்கு இன்னும் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப் படவேண்டும் என்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர். ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இந்த வழக்குடன் தொடர்புடைய ஆறு பேருக்கும் நீதிபதி குறைவான சிறைத் தண்டனை விதித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தீர்ப்பளித்த நீதிபதி பெரிய தொகை கையாடப்பட்டதைக் கருத்தில் கொள்ள தவறிவிட்ட தாகவும் தீர்ப்பளிக்கும் விதி முறையை அவர் புறக்கணித்து விட்டதாகவும் அரசு வழக்கறி ஞர்கள் கூறினர்.

இந்த ஆறு பேர் புரிந்த குற்றம் தேவாலயத்துக்கு நிரந்தர இழப்பை ஏற்படுத்தவில்லை என்றும் செய்த குற்றத்திலிருந்து அவர்கள் தனிப்பட்ட முறையில் பலன் அடையவில்லை என்றும் நீதிபதி கருதியதாக அவர்கள் வாதிட்டனர். இந்த ஆறு பேரும் தெரிந்தே சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தின் நிதி நிலைக்கு ஆபத்து விளை வித்ததாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பணம் திரும்ப கிடைக்காது என்று தெரிந்தும் தேவாலயத்துக்குச் சொந்தமான 24 மில்லியன் வெள்ளியைப் போலி முறிகளில் அவர்கள் முதலீடு செய்ததாக அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.

சிட்டி ஹார்வஸ்ட் தேவாலய மோசடி தொடர்பாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேருக்கு இன்னும் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கவேண்டும் என்று அரசு வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்