பல வசதிகளுடன் புதிய நகரும் நூலகம் மோலி

தேசிய நூலக வாரியம் புத்தம் புதிய நடமாடும் நூலகம் ஒன்றை தொடங்கியிருக்கிறது. சிங்கப் பூரில் புத்தக வாசிப்புப் பழக்கத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வாரியம் நேற்று மோலி (Moly) என்ற நகரும் நூலகத்தை ஈடுபடுத்தியது.  குவான் இம் தோங் ஹுட் சூ ஆலயத்தின் பொறுப்பாதரவுடன் கூடிய மோலி, பல வசதிகளையும் கொண்டிருக்கிறது. உடற்குறையுள்ளவர்கள் அவர் களைக் கவனித்துக் கொள்வோர் ஆகியோரின் வசதியைக் கருத்தில் கொண்டு சக்கர நாற்காலி மின்தூக்கி ஒன்றும் வசதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  பாடம் நடத்துவது போன்ற செயல்களுக்கு வசதியாக காந்த வெண்பலகை ஒன்றும் மோலியில் இருக்கிறது. இளையர்கள் புத்தகங்களை இரவல் வாங்கி அவற்றைத் திருப்பிக் கொடுப் பதற்கு ஏற்ற உயரத்தோடு மோலி அமைக்கப்பட்டுள்ளது. 

தொடர்பு, தகவல் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் இந்த புதிய நகரும் நூலகத்தின் திறப்பு விழாவில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் மோலியில் பொருத்தப் பட்டுள்ள மின்தூக்கியின் உதவி யோடு சக்கரநாற்காலியில் இருக் கும் ஒரு மாணவரை மோலிக்குள் ஏற்றிவிட உதவினார். நகரும் நூலகம் என்பது சிங்கப்பூர் வீதிகளுக்குப் புதிய அம்சம் அல்ல. சிங்கப்பூரில் கடந்த 60கள் முதற்கொண்டே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நகரும் நூலகங்கள் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே ஊக்குவித்து வருகின்றன.  இது பற்றி கருத்துக் கூறிய இந்த வாரியத்தின் பொது நூலக நடவடிக்கைப் பிரிவின் தலைவர் லிம் கோக் எங், 57, கடந்த 1960களில் சிங்கப்பூர் வளரும் நாடாக இருந்தது என்றும் அப்போது இத்தகைய நூலகங் களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் குறிப்பிட்டார்.  பிறகு நகரும் நூலகச் சேவைகள் நூல் வாசிப்புப் பழக்கத்தையும் வசதியையும் மக்களை எட்டி அவர்களி டையே  கொண்டு சேர்ப்பதற்கான வழியாகப் பரிணமித்தன. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

இஸ் ஃபயாஸ் ஸயானி அகமது எனும் அந்த 9 மாதக் குழந்தை இம்மாதம் 8ஆம் தேதி இறந்துபோனதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்டதாக அவனது குடும்பத்தாரின் ஃபேஸ்புக் பதிவுகள் குறிப்பிட்டன. படம்: ஃபேஸ்புக்

15 Nov 2019

குழந்தையின் தலையை காரில் மோதிய ஆடவர்மீது இப்போது கொலைக் குற்றச்சாட்டு