பயங்கரவாதத் தடுப்பில் முக்கிய பங்கு

முஹம்மது ஃபைரோஸ்

பயங்கரவாதம் என்பது சிங்கப் பூரின் ஒட்டுமொத்த பாதுகாப்பை அச்சுறுத்துவதோடு சமூக நல்லி ணக்கத்துக்கும் மக்களின் வாழ்க்கைமுறைக்கும் மிரட்ட லாக அமைகிறது. ஆனால் அத் தகைய பயங்கரவாத மிரட் டலைச் சமாளிக்க அரசாங்கத் தின் முயற்சி மட்டும் போதாது என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். “தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப் பதில் சிங்கப்பூரர்களுடைய பங்கு முக்கியம். அதைச் செய்யத்தான் ‘எஸ்ஜி பாதுகாப்பு’ தேசிய இயக் கம் முற்படுகிறது,” என்றார் அவர். சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடி வமைப்பு பல்கலைக்கழகத்தில் (எஸ்யுடிடி) நேற்று ‘எஸ்ஜி பாது காப்பு’ தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சிங்கப் பூரர்கள் ஒன்றாகச் செயல்பட்டு பயங்கரவாத மிரட்டல்களை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மாறிவரும் பயங்கரவாத மிரட் டலைப் பற்றி எடுத்துரைத்த அவர், சுயமாக தீவிரவாதப் போக் கிற்கு ஆளாகும் தனிநபர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு சாதாரணப் பொருட்களை ஆயு தங்களாக பயன்படுத்தி உலகெங் கும் தாக்குதல்கள் மேற்கொள் வதைச் சுட்டிக் காட்டினார்.

‘ஸ்மார்ட்-டச்’ மேசை முன் பிரதமர் லீ சியன் லூங், சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன்சி ங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next