தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட பேரணி: யாழ்ப்பாணத்தில் பல்லாயிரம் பேர் திரண்டனர்

இலங்கை வடக்கு மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் பேரணி ஒன்றை தமிழ் மக்கள் பேரவை என்னும் அமைப்பு நடத்தியது. வடக்கு மாகாண முதலமைச் சர் சி.வி. விக்னேஷ்வரன் தலை மையில் நடைபெற்ற பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன் னணி, தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் பங்காளிக் கட்சி களாகிய ஈபிஆர்எல்எஃப், புலோட் போன்றவற்றைச் சேர்ந்தோர் பங் கேற்றனர். மேலும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தோரும் தொழிற்சங்கவாதி களும் பெருமளவில் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழ்க் கைதி களின் குடும்பங்கள், காணாமல் போனோரின் உறவினர்கள், ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் என்று தமிழ் மக்களின் பெரும் பாலான பிரதிநிதிகள் பங்கேற்ற மாபெரும் ஊர்வலமாக இது அமைந்தது. பல்லாயிரம் பேர் அணிவகுத்துச் சென்றனர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் திரும்ப வழங்கப்பட வில்லை; தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் தீர்க் கப்படவில்லை என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ‘எழுக தமிழ்’ என்று பெயரிடப் பட்ட இந்தப் பேரணி நடந்தது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஓர் அணி, நல்லூரில் இருந்து மற்றோர் அணி என இரண்டு அணி களாகத் திரண்டு வந்தவர்கள் இறுதியில் யாழ்ப்பாணம் திறந்த வெளித் திடலில் ஒன்றுகூடினர். அங்கு கோரிக்கைகளை வலி யுறுத்தி கூட்டம் ஒன்று நடத்தப் பட்டது.

முதலமைச்சர் விக்னேஷ்வரன் உள்ளிட்ட முன்னணித் தலைவர் கள் அக்கூட்டத்தில் உரைநிகழ்த் தினர். ‘தமிழ் மக்கள் பேரவை’ நடத்தி இருக்கும் பேரணி கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலான போர் நிறுத்த காலத்தில் தமிழீழ விடு தலைப் புலிகளால் நடத்தப் பட்ட ‘பொங்கு தமிழ்’ பேரணிக்கு இணையானது என்று அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு முழக்கமிட்ட பேரணி. படம்: இலங்கை ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்
Gotabaya Rajapaksa has won the Sri Lankan presidency after a closely fought election

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

17 Nov 2019

தேர்தலில் வெற்றி; இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

மாநாட்டிற்கு வந்திருந்தோரிடம் உரையாடினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். நடுவில் தெற்காசிய ஆய்வுக் கழகத் தலைவர் கோபிநாத் பிள்ளை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

புலம்பெயர் சமூகத்துக்கு மூன்று யோசனைகள்

(இடமிருந்து) தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் தலைவர்
கோபிநாத் பிள்ளை, மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்,
திரு ஜே.ஒய். பிள்ளை, திரு மன்சூர் ஹசான், என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய். படம்: தெற்காசிய ஆய்வுக் கழகம்

17 Nov 2019

ஜே.ஒய். பிள்ளைக்கு சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது