ஜப்பானில் தேசிய நாள் கொண்டாடிய பிரதமர் லீ சியன் லூங்

ஜப்பானுக்கு நான்கு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லீ ஜப்பான் அரசர் அஹிகிட்டோ அரசி மிசிக்கோ இருவரையும் திரு லீ சந்தித்தார். திரு லீ, திருமதி லீ இருவருக்கும் ஜப்பான் அரச மாளிகையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அவர்களது சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. ஜப்பானில் வசிக்கும் கிட்டத்தட்ட 500 சிங்கப்பூரர் களுடன் பிரதமர் தேசிய நாளைக் கொண்டாடினார். டோக்கியோ, பேலஸ் ஹோட்டலில் தேசிய நாள் கொண்டாட்ட விருந்து நடைபெற்றது. படத்தில் செஃல்பி எடுக்கும் பிரதமர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next