அமரர் லீ குவான் இயூவுக்கு ஜப்பானின் உயரிய விருது

சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ, பல்லாண்டு காலமாக ஜப்பானுடன் நல்லுறவைப் பேணிக் காத்து வந்துள்ளார். அதற்காக அவருக்கு நேற்று ஜப்பான் அந்நாட்டின் ஆக உயரிய விருதளித்து கௌரவித் தது. அந்த விருதை மறைந்த திரு லீ குவான் இயூ சார்பில் பிரதமர் லீ சியன் லூங் ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபேயிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இதுபற்றிக் கூறிய பிரதமர் லீ, நெறி சார்ந்த பணி, ஒழுக்கம், உற்பத்தி போன்றவற்றில் ஜப்பா னைப் பின்பற்றுபவர் தனது தந்தை திரு லீ என்றார். “திரு லீயும் ஜப்பானிய தலைவர்களும் கட்டிக் கொடுத்த அடித்தளத்தைப் பின் பற்றி நமது நல்லுறவின் புதிய உச்சத்தை அடைவோம்,” என்றார். ஜப்பானிய அரசால் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருது மறைந்த தலைவர் ஒருவருக்கு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை. 1967ல் திரு லீ குவான் இயூவுக்கு ஜப்பானில் அளிக்கப்பட்ட விருதைக் காட்டி லும் கௌரவமிக்க விருதாக இது கருதப்படுகிறது.

சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான அரசதந்திர உறவின் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வர்த்தகம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்த உடன்பாடுகள் நேற்றுக் காலை கையெழுத்தாகின. சிங்கப்பூரின் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழும் ஜப்பானின் ஊடகக் குழுமமான ‘நிக்கெய் பிஸ்னஸ் பப்ளிகேஷன்ஸும்’ இணைந்து தோக்கியோவில் உள்ள யுனைடெட் நேஷனல் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்த வர்த்தகக் கருத்தரங்கின் இடையே இந்தக் கையெழுத்துச் சடங்கு இடம்பெற்றது. கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள் நேற்று மாலை நடை பெற்ற இருதரப்பு சந்திப்பின்போது, இரு நாடுகளின் பிரதமர்கள் முன்னிலை யில் பரிமாறிக்கொள்ளப் பட்டன. இந்த வர்த்தக உடன்பாடு களில் சம்பந்தப்பட்ட அமைப்புக ளான ‘ஐஇ சிங்கப்பூர்’ ‘ஜெட்ரோ’ எனப்படும் ஜப்பானின் வெளிப்புற வர்த்தக அமைப்பும் இரு நாடுகளுக்கிடையே நிலவும் இணைப்பை மேலும் வலுவாக்க உறுதி எடுத்துக்கொண்டன.

மறைந்த திரு லீ குவான் இயூவுக்கு வழங்கப்பட்ட ஜப்பானின் ஆக உயரிய விருதை ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபேயிடம் (வலது) இருந்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பெற்றுக்கொண்டார். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next