‘அடுத்த பிரதமர் யார் என்பதை இளம் அமைச்சர்கள் தீர்மானிப்பர்’

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் யார் என்பதை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இளம் உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசி முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். “இளம் அமைச்சர்கள்தான் யார் அடுத்த பிரதமர் என்பதைத் தீர் மானிக்க வேண்டும். ஏனெனில், புதிய பிரதமருக்கு உறுதுணையாக இருக்கப்போவது அவர்கள்தான்,” என்று பிரதமர் லீ கூறியுள்ளார். ஜப்பானில் நடந்த ‘எதிர்கால ஆசியா’ என்ற தலைப்பில் நடந்த 22வது நிக்கேய் அனைத்துலக மாநாட்டின் சிறப்பு அமர்வின்போது திரு லீ இவ்வாறு சொன்னார். கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரின் பிரதமராக இருந்து வருகிறார் 64 வயதான திரு லீ. இந்நிலையில், சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் யார் என்பது பற்றி ‘யாஹு சிங்கப்பூர்’ அண்மையில் ஒரு கருத்தாய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வில் பங்கேற்ற 897 பேரில் 69 விழுக்காட்டினர் இப் போதைய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னத்திற்கு ஆதரவாகக் கருத்துக் கூறியிருந்தனர். ஆயினும், திரு தர்மன், “அடுத்த பிரதமருக்கான ஆள் நான் அல்ல,” என்று தெளிவாகக் கூறிவிட்டார். கடந்த மாதம் தேசிய தினப் பேரணி உரையின்போது திரு லீக்குச் சற்று உடல்நலக்குறைவு ஏற்பட, சிறிது ஓய்வுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் மேடைக்குத் திரும்பி தமது உரையை அவர் தொடர்ந்தார். அதையடுத்து, அரசியல் தலை மைத்துவ மாற்றம் குறித்த விவாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உரு வெடுத்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகத் திரு லீ மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். 2021 ஏப்ரல் மாதத் திற்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

“திறமையான, நல்ல மனம் படைத்த, கடப்பாடுமிக்க, மக்களை ஒன்றிணைக்கும் வல்லமை கொண் டவர்களாக, சிங்கப்பூரை வழிநடத் தும் திறன்கொண்டவர்களாகத் தலைவர்கள் திகழவேண்டும் என சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர்,” என்றும் பிரதமர் லீ சொன்னார். இந்தப் பண்புகளை அடிப்படை யாகக் கொண்டு, தம்மால் முடிந்த அளவுக்குச் சிறப்பானதொரு குழு வைத் தமது அமைச்சரவையில் ஒன்றுதிரட்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தமது அமைச்சர வையில் இடம்பெற்றுள்ள இளம் உறுப்பினர்களில் ஒருவரே பெரும் பாலும் அடுத்த பிரதமராக வரக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். “அது யார் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். சரியான நேரத்தில் தங்களை வழி நடத்தப் போகும் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து அவர்களுக் குள் கருத்தொற்றுமை தோன்றும் என நான் உறுதியாக நம்புகிறேன்,’ என்றும் திரு லீ சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அன்றைய தினம் காலை 11 மணி முதல் தங்களது பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Nov 2019

பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள் நவம்பர் 21ல் வெளியீடு

லோரோங் செசுவாயில் ஒரு காருக்குள் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாகவும் காருக்கு அருகில் 41 வயது மாது அசைவின்றிக் கிடந்ததாகவும் கூறப்பட்டது. படங்கள்: ஷின் மின்

14 Nov 2019

புக்கிட் தீமா தடைசெய்யப்பட்ட பகுதியில் சிறுவன், பெண் ஆகியோரது சடலங்கள்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து  குடிநுழைவு சோதனைச்சாவடிகளிலும் 2025ஆம் ஆண்டுக்குள் கைரேகை, முக அடையாளம், கண் ஆகியவற்றை 'ஸ்கேன்' செய்து தானியக்க குடிநுழைவு சோதனை முறை கடைப்பிடிக்கப்படும். கோப்புப்படம்

13 Nov 2019

அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் 2025க்குள் தானியக்க குடிநுழைவுச் சோதனை