பீஷான் சாலையில் விபத்துக்குள்ளான ஐந்து வாகனங்கள்; இருவர் காயம்

பீஷான் சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் மொத்தம் ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன. அவற்றில் இரண்டு கார்கள், இரண்டு லாரிகள், ஒரு பிக்-அப் வேன் ஆகியவை அடங்கும். பீஷான் சாலையில் அமைந்துள்ள எஸ்எம்ஆர்டி பணிமனையின் வாசலுக்கு அருகில் விபத்து நிகழ்ந்ததாக காலை 7.50 மணிக்குத் தகவல் கிடைத்தது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் ஒன்று உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய 20 வயது மதிக்கத்தக்க ஆடவரும் பெண்ணும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். அந்த ஆடவரின் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண்ணுக்கு வலது தோள்பட்டையில் வலியும் இடது கணுக்காலில் வீக்கமும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

செய்தியாளர்களுடனான சந்திப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு திரு மகாதீரின் மெய்க்காப்பாளர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். படம்: தி ஸ்டார்

19 Nov 2019

மூக்கில் ரத்தம் வழிந்ததால் அவசரமாக வெளியேறிய மலேசிய பிரதமர்