தெம்பனிஸ் வீவக புளோக்குகளில் ஊடுகதிர்ச் சோதனை

தெம்ப­னிஸ் புளோக்­கு­களில் உள்ள நிழல் மாடங்களின் தன்மை யை உறுதி செய்ய நான்கு புளோக்குகளில் ஊடு­கதிர்ச் சோத னையை வீவக தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (செப்­டம்பர் 25) தெம்ப­னிஸ் ஸ்ட்­ரீட் 23ல் உள்ள புளோக் 210E-யில் நிழல் மாடம் ஒன்று பெயர்ந்து கீழே விழும் ஆபத்­தான நிலை­யில் தொங்­கி­யது. அதனைத் தொடர்ந்து வீவக இந்த ஊடு­க­திர்ச் சோதனையை முடுக்­கி­விட்­டுள்­ளது. கடந்த வாரம் நடந்த இந்தச் சம்ப­வத்­தில் நல்­ல­வேளை­யாக யாரும் காயமடையவில்லை. நிழல் மாடம் பெயர்ந்ததற்கான கார­ணம் என்­ன­வென்று தெரி­ய­வில்லை. இது தொடர்­பான விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. நிழல் மாடம் பெயர்ந்தாலும் கட்­ட­டத்­தின் கட்­டமைப்பு வலுவாக உள்­ள­தாக வீவக பொறி­யா­ளர்­கள் உறு­தி­ய­ளித்­துள்­ள­னர்.

தெம்ப­னிஸ் ஸ்ட்­ரீட் 23ல் உள்ள அந்த பாதிக்­கப்­பட்ட புளோக்கில் உள்ள நிழல் மாடத்தை போன்று டெம்ப­னிஸ் ஸ்ட்­ரீட் 21ல் உள்ள 201A, 201B, 201D ஆகிய புளோக்­கு­களிலும் உள்ளன. எனவே அந்த புளோக்குகளிலும் ஊடுகதிர்ச் சோதனை செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக வீவக தெரி­வித்­துள்­ளது. நிழல் மாடத்­தின் கான்­கி­ரிட் உறுதித் தன்மையை அறிந்­து ­கொள்­வதும் இந்த ஊடுகதிர்ச் சோதனை­யில் ஓர் அங்கம். இக் கருவி காந்த அலை­களை கான்­கி­ரீட்­டுக்­குள் ஊடு­ரு­வச் செய்து நிழல் மாடத்­தி­னுள் இறுக்­கப்­பட்­டுள்ள கம்­பி­களின் தன் மையை அறிய உத­வும்.

இச்சோதனை மேற்­கொள்­வ­தற்­காக சாரம் கட்­டப்­பட்டு, பாது ­காப்­புத் தடுப்­பு­களும் வைக்­கப்­பட்­டுள்­ளதாக கழகம் தெரிவித்தது. இந்நிலையில் கடந்த ஞாயி­றன்னு பெயர்ந்து தொங்­கிய நிழல் மாடம் கட்­டு­மா­ன ஆய்வுக்­கூ­டத்­திற்கு எடுத்­துச் செல்­லப்பட்­டுள்­ ளது. ஆய்­வுக்­கூ­டச் சோதனை முடிவு, கட்­டு­மான இடச் சோதனை ஆகி­ய­வற்­றின் மூலமே நிழல் மாடம் பெயர்ந்த­தற்­கான கார­ணத்தை அறிய முடி­யும் என்று வீவக கூறி­யது.

வீவக பொறியாளர் ஒருவர் ஸ்ட்ரீட் 23ல் உள்ள புளோக் 201E-யின் நிழல் மாடத்தை ஊடுகதிர் மூலம் சோதனை செய்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!