நீரிழிவு நோயாளிகளுக்கு கண் பரிசோதனை

நீரிழிவு நோயாளிகளிடையே கண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் நோக்கத்தில் சமூக மன்றங்களைத் தாண்டி கண் பரிசோதனைகளை விரிவுபடுத்த அரசாங்கம் பரி சீலித்து வருகிறது. செங்காங்கில் உள்ள எங்கர் வேல் சமூக மன்றத்தில் நேற்று சுமார் 500 குடியிருப்பாளர்கள் பங் கேற்ற கண் பரிசோதனை நிகழ்ச்சி யில் பேசிய சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின், நீரிழிவு நோயால் விளையும் சிக் கல்களைக் குறைக்கும் முயற்சிகளை முடுக்கிவிட அரசாங்கம் விரும்புகிறது என்று கூறினார்.

நீரிழிவால் விழித்திரை பாதிக் கப்படுவதே சிங்கப்பூரில் வேலை செய்யும் பெரியவர்களிடையே பார்வை இழப்பு ஏற்படுவதற்கு முக் கிய காரணம். நீரிழிவு நோய் தொடர்பான மருத்துவ சிகிச்சைகளை மேம்ப டுத்தும் வழிவகைகளை ஆராயும் பணிக் குழுவுக்குத் தலைமை தாங்கும் டாக்டர் லாம், சமூக மன்றங்களைத் தாண்டி நடத்தப் படும் நீரிழிவு கண் பரிசோதனை கள் பற்றி கருத்துரைத்தார். “இது பற்றி எனது பணிக் குழு ஆராய்ந்து வருகிறது. அதிக மான நீரிழிவு நோயாளிகளைச் சென்றடைந்து அவர்களுக்கு கண் பரிசோதனை நடத்துவது எங்கள் இலக்கு,” என்று குறிப் பிட்ட அமைச்சர் லாம், தற்போது நடப்பில் உள்ள சிங்கப்பூர் ஒருங்கி ணைந்த நீரிழிவு விழித்திரை பரி சோதனைத் திட்டத்தை இதர நோயாளிகளுக்கும் விரிவுபடுத் துவது பற்றியும் தமது பணிக் குழு பரிசீலித்து வருகிறது என் றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காரின் முன்புற வலது சக்கரத்திலும் அதற்கு அருகிலும் ரத்தம் காணப்பட்டது. படம்: ஷின் மின் நாளிதழ்

21 Nov 2019

பென்ஸ் காருடன் மோதிய விபத்தில் 64 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்

இவ்வாண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. டெங்கியால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Nov 2019

அதிகரிக்கும் டெங்கி தொற்று; இந்த மாதமும் இருவர் உயிரிழப்பு