அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஆடவர் மரணம்

ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில், சிக்லாப் செண்டருக்கு எதிரே நேற்று அதி­காலை­யில் நடந்த சாலை விபத்­தில் 25 வயது ஆடவர் ஒருவர் சம்பவ இடத்­தி­லேயே மாண்டார். ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டின் மத்தி யில் உள்ள இரும்புத் தடுப்­பில் அவரது கார் மோதி­ய­தால் விபத்து நேர்ந்தது. அப்போது கனத்த மழை பெய்து கொண்­டி­ருந்தது. மவுண்பேட்டன் ரோட்டை நோக் கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கார் ஈரமாக இருந்த சாலையில் சறுக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காரில் சிக்கிக் கொண்ட அந்த ஆட­வரைச் சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்புப் படை அதி­கா­ரி­கள் இரும்பை வெட்டும் கருவியைக் கொண்டு ஓட்டுநர் பகுதியை அறுத்து அவரை விடு­வித்­த­னர். ஆனால், சம்பவ இடத்­தி­லேயே அவர் மாண்டு விட்டார் என்று மருத்துவ அதிகாரிகளால் உறுதிப் படுத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்துக்கு அரு­கி­ல் உள்ள தரை­ வீட்­டில் வசித்து வரும் 47 வயது எலன், பலத்த இரைச்­சல் கேட்டு தான் விழித்­துக்­ கொண்ட­தா­கத் தெரி­ வித்தார். விபத்து நடந்த பிறகு அந்த வட்­டா­ரத்­தில் இரண்டு மணி நேரத்திற்கு கடும் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்பட்­டது. விசாரணை தொடர்கிறது.

கனத்த மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதால், கார் சாலையில் சறுக்கி இரும்புத் தடுப்பில் மோதியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. படம்: திரு யாப்

Loading...
Load next