நின்றுவிட்ட கம்பி வண்டியில் சிக்கியவரை மீட்கும் பயிற்சி

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று அதி உயர மீட்புப் பயிற்சி ஒன்றை நடத்தியது. கம்பி வண்டிகளில் செல்லும் ஒரு பயணி, வழியில் அந்த வண்டி நின்று அதில் மாட்டிக் கொண்டால் அவரை மீட்பது எப்படி என்பதன் தொடர்பிலான தேர்ச்சியைப் பெறுவது இந்தப் பயிற்சியின் நோக்கம். குடி மைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பக் கத்தில் இந்தப் பயிற்சி பற்றிய விவ ரங்களைத் தெரிவித்தது.

மவுண்ட் ஃபேபர் நிலையத் திற்கும் மவுண்ட் ஃபேபர் வழித்தடத் தின் செலிகு தூணுக்கும் இடையில் நின்றுவிட்ட ஒரு கம்பி வண்டியில் சிக்கிக்கொண்டவரை இந்தப் படை யின் பேரிடர் உதவி மீட்புக் குழு அதிகாரிகள் மீட்டனர். பயிற்சி காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவிருந்தது.

ஆனால் பருவநிலை மோசமாக இருந்ததன் காரணமாக பயிற்சி நேற்றுக் காலை நிறுத்தி வைக்கப் பட்டது. பிறகு பயிற்சி தொடங்கியதும் அதைக் காட்டும் நேரடிப் படங் களை ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தப் படை பதிவேற்றம் செய்தது. இத்தகைய வழக்கமான பயிற்சிகள் சிங்கப்பூர் கம்பிவண்டி நிறுவனத்துடன் அணுக்கமாகச் சேர்ந்து நடத்தப்படுவதாக குடி மைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழு அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபட்டனர். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

Loading...
Load next