திறன் கல்வி, சுற்றுப்பயணத் துறையில் சிங்கப்பூரும் ராஜஸ்தானும் கூட்டு முயற்சி

உதய்ப்பூரிலிருந்து தமிழவேல், துணை செய்தி ஆசிரியர்

சிங்கப்பூரின் உதவியுடன் ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் நேற்று சுற்றுப்பயணத்துறையில் திறன் பயிற்சி மையம் ஒன்று அதி­காரபூர்வமாகத் திறக்கப்பட்டது. தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் பிரதமர் லீ சியன் லூங் முன்னி லையில் இந்தச் சிஇடிடி திறன் பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்தனர். இந்தப் பயிற்சி நிலையம் கடந்த ஆண்டு செய்யப்பட்ட சிங்கப்பூர்= இந்தியா உத்திபூர்வ பங்காளித்து­வத்தின் கீழ் செய்யப்பட்ட திறன் மேம்பாட்டுக் கூட்டணியின் ஓர் அங்கமாகும். முதலமைச்சர் வசுந்தரா கடந்த 2014ஆம் ஆண்டு சிங்­கப்பூர் வந்து சென்ற பிறகு சிங்­கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகச் சேவைகளின் ஆலோசனை பிரிவுக்கு ராஜஸ்தான் அரசு அழைப்பு விடுத்தது.

உதய்ப்பூரில் உள்ள அரசு தொழில்துறை பயிற்சி நிலையத்­தைத் தொழில்நுட்பக் கல்வியில் முன்னோடி நிலையமாக மாற்று­வதற்கு ராஜஸ்தான் அரசு சிங்கப்பூரின் உதவியை நாடியது. அதைத் தொடர்ந்து சிங்கப்­பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகச் சேவைகளின் ஆலோச­னைப் பிரிவு நடத்திய தேவை அடிப்படையிலான ஆய்வில் ராஜஸ்­தானுக்குச் சுற்றுப்பயணத்­துறை சேவைகள் துறையில் ஆள்பலத் தேவை இருப்பது கண்டறியப்பட்டது. உதய்ப்பூரில் நேற்று திறக்கப்­பட்ட உன்னத சுற்றுப்பயணத்துறை பயிற்சிக்கான திறன் பயிற்சி நிலையம் முழுமையாகச் செயல்­படத் தொடங்கியவுடன் ஆண்­டுக்கு 480 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும். இங்­குள்ள 36 பயிற்சியாளர் களுக்குச் சிங்கப்பூர் தொழில் நுட்பக் கல்விக் கழகச் சேவை களின் ஆலோசனைப் பிரிவு பயிற்சியும் அளிக்கும்.

புதிய பயிற்சி நிலைய வளாகத்தில் அமைச்சர் ஓங் இரு உருத்திராட்ச மரக்கன்றுகளை நட் டார். உதய்ப்பூரில் நேற்று ராஜஸ்தான் அரசுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சுற்றுப்பயணத்துறை, நகரக் கட்டமைப்புத் துறை கூட்­டுறவிலும் சுற்றுப்பயணத்துறை, சேவைகள் துறையில் வளங்களை உருவாக்கும் திட்டத்திலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்­கள் கையெழுத்திடப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

லோரோங் செசுவாயில் ஒரு காருக்குள் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாகவும் காருக்கு அருகில் 41 வயது மாது அசைவின்றிக் கிடந்ததாகவும் கூறப்பட்டது. படங்கள்: ஷின் மின்

14 Nov 2019

புக்கிட் தீமா தடைசெய்யப்பட்ட பகுதியில் சிறுவன், பெண் ஆகியோரது சடலங்கள்

பொதுவான நோக்கத்துடன் கடுமையான சூட்டுக் காயத்தால் சிறுவனைக் கொன்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அவனது பெற்றோர் அஸ்லின் அருஜுனா, அவரது கணவரான ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான். படம்: ஃபேஸ்புக்

14 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவனின் தாய்: ‘என் சிறிய உடலுடன் எப்படி ஒரு குழந்தையை நான் கொல்ல முடியும்?’