‘வாய்ப்புகள் நிறைந்த இந்தியா’

உதய்ப்பூரிலிருந்து தமிழவேல், துணை செய்தி ஆசிரியர்

இந்தியாவில் முதலீடு செய்வதால் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர் களுக்கும் நேரடியாகவும் மறை முகமாகவும் நன்மைகள் உண்டு என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு,  ஆந்திர மாநிலத்தின் அமராவதி நகர் போன்ற நகர வடிவமைப்பு என வரும்போது அது நேரடி பலன் களை அளிக்கும் என்று திரு லீ விளக்கினார். அதன் முதன்மை குத்தகை சிங்கப்பூருக்குக் கிடைத்தால் அதனால் வர்த்தக வாய்ப்புகள் பெருகும். அதே சமயம் திறன் பயிற்சி என வரும் போது அது மறைமுகமான பலன்களைத் தரும் என்று பிரதமர் கூறினார். ராஜஸ்தான் மாநில அரசுக்கு நமது தொழில்நுட்பக் கல்விப் பயிற்சித் திறன்களை அளிக்கும் போது அதனால் ஏற்படும் நட்புறவு மூலம் பயணத்துறை, முதலீடு போன்ற மற்ற துறை களிலும் வாய்ப்புகளைப் பெற ஏதுவாக இருக்கும் என்று விளக்கினார் திரு லீ.

தமது ஐந்து நாள் இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் லீ. எனினும், மொத்தமாகப் பார்க்கையில், இந்தியா உடனான தனது உறவைச் சிங்கப்பூர் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வலுவாக்கி வரு கிறது என்ற திரு லீ, நமது முதலீடுகளும் வர்த்தக உறவு களும் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும், 1990ஆம் ஆண்டில் டாக்டர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் திரு நரசிம்ம ராவ் பிரதமராகவும் இருந்த காலகட்டத்தைவிட இந்தியா இப்போது நிறைய முன்னேற்றங் களைக் கண்டுள்ளது என்றும் நாம் பல சிரமங்களை எதிர் நோக்கினாலும் வாய்ப்புகளும் நிறைய உள்ளன என்றும் தாம் நம்புவதாகப் பிரதமர் குறிப்பிட் டார். இந்தியாவின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகள் கடந்த சில ஆண்டுகளாக மாற்றம் கண்டுள்ளதையும் அவர் சுட்டினார்.

“உன்னிப்பாகப் பார்த்தால் இந்தியா தனது கொள்கைகளில் செய்த பல மாற்றங்களால் தற்காப்பு உட்பட பல துறைகளில் இன்னும் பெரிதாக வெளிநாட்டு முதலீடுகளைச் செய்ய முடி கிறது,” என்றார் பிரதமர். கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரின் முக்கிய பங்காளித் துவ நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் லீ, “நண்பர்களும் பங்காளிகளும் நமக்கு மிகவும் முக்கியம்,” என் றார். ஏற்கெனவே சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இவ்வாண்டு பயணம் மேற்கொண்ட பிரதமர் லீ, அடுத்து ஆஸ்திரேலியா விற்குச் செல்லவிருக்கிறார். இந்தியா ஆண்டுக்கு 7.5% வளர்ச்சி கண்டு வருகிறது எனக் கூறிய பிரதமர், இங்கு முதலீடுகள் வலுவான நிலையில் உள்ளன என்றும் இந்தியா தனது உற்பத்தித் துறை, ஏற்றுமதி ஆகியவற்றை வலுப்படுத்தி, பயணத் துறையையும் மேலும் பலவிதமான வர்த்தகங்களையும் ஊக்குவிக்கிறது என்றார்.

இந்தியாவுடனான முழுமை யான பொருளியல் கூட்டுறவு ஒப்பந்தம் தற்போது இரண்டாம் மறுஆய்வைச் சந்தித்து வரு கிறது என்றும் அது விரைவில் முடிவடையும் என்று தாம் நம்பு வதாகவும் திரு லீ குறிப்பிட்டார். சொத்து முதலீட்டு வரிவிலக்கு ஒப்பந்தத்தை விலக்குவது குறித்த இந்தியாவின் முடிவை மாற்றும்படியும் பிரதமர் லீ இந்திய அரசிடம் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த வரிவிலக்கு இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள மொரி ‌ஷியஸ் நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி மொரி‌ஷியசுடனான இந்த வரிவிலக்கு ஒப்பந்தம் நீக்கப்பட்ட தால் சிங்கப்பூருக்கும் அது பொருந் தும் என இந்தியா நம்புகிறது. ஆனால் சிங்கப்பூரை மொரி‌ஷிய சுடன் ஒப்பிடக்கூடாது என்றும் சிங்கப்பூரின் நிதித்துறை மதிப்புக் குரிய ஒன்று என்றும் திரு லீ குறிப்பிட்டார். சிங்கப்பூரில் இந்தியாவின் கறுப்புப் பணப் புழக்கம் வருவதற்கு ஒருபோதும் அனுமதியோம் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ
Gotabaya Rajapaksa has won the Sri Lankan presidency after a closely fought election

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

17 Nov 2019

தேர்தலில் வெற்றி; இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே