மின்னிலக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும் புதிய முகவை

சிங்கப்பூர் அரசாங்கம், குடி மக்களுக்கு இன்னமும் சிறந்த வகையில் சேவையாற்றுவதற்காக புதிய அமைப்பு ஒன்றைத் தொடங் கியிருக்கிறது. சுமார் 1,800 தரவுத் தள அறி வியலாளர்கள், தொழில்நுட்பர்கள், பொறியாளர்களை உள்ளடக்கிய புதிய அமைப்பின் பெயர் அரசாங் கத் தொழில்நுட்ப முகவை என்ப தாகும். இந்தப் புதிய முகவை, அறி வார்ந்த தேசத் திட்டங்களுக்கும் பழைய அரசாங்க இணையச் சேவைகளைப் புதுப்பிக்கவும் ஆதரவுக்கரம் நீட்டும். புதிய அரசாங்கத் தொழில் நுட்ப முகவை, பலதரப்பட்ட திட் டங்களை கையாளவிருக்கிறது. தானியக்க முறையில் வங்கிப் படிவங்களை சமர்ப்பிக்க உதவும் குடிமக்களின் சொந்த விவரங்கள் அடங்கிய மின்னிலக்கப் பெட்டகம், தன்னிச்சையாக இயங்கும் சக்கர நாற்காலியின் முன்மாதிரி போன்ற திட்டங்களில் முகவை ஈடுபடும். இத்தகைய திட்டங்கள் பொதுத் துறையில் பெரிய அளவில் மின்னி லக்க மாற்றங்களுக்கு வழி வகுக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முகவையைத் தொடங்கி வைத்துப் பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம், “அறிவார்ந்த தேசமாக உருவாக புதிய தொழில்நுட்பங்களைத் தழுவி சிங்கப்பூர் முன்னோக்கிச் செயல்படுவது அவசியம்,” என்றார்.

அதே சமயத்தில் புதிதாக உரு வாக்கப்பட்ட தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் பங்கு குறித்துப் பேசிய அவர், தனியார் துறையுடன் அது சேர்ந்து செயல்பட்டு சிங்கப்பூரை மின் னிலக்க எதிர்காலத்துக்கு இட்டுச் செல்லும் என்று கூறினார். “புதிய அரசாங்கத் தொழில் நுட்ப முகவை, பொதுத்துறையில் மின்னிலக்க மாற்றங்களை ஏற் படுத்தும்,” என்றும் டாக்டர் யாக் கூப் குறிப்பிட்டார். புதிய பொருளியல் வாய்ப்பு களைக் கண்டறிவதற்காக தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையமும் ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைக்கப்பட்டு ‘ஐஎம்டிஏ’ எனும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய முகவை, அதன் வலுவான 1,800 ஊழியர் அணியுடன் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வும் இதற்கான நடைமுறைகளில் ஆற்றல்களைப் பெருக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத் தொழில்நுட்பம் என்ற புதிய முகவை தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தொடர்பு, தகவல் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம், ‘த ஸ்டார்’ அரங்கத்தில் நடைபெற்ற காட்சிக் கூடத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் செயல்படும் கைத்தடியைப் பார்வையிட்டு புன்னகைக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next