பலரையும் தயார்படுத்துவதில் அரசாங்கம் ஒருமித்த கவனம்

தேசிய விளையாட்டு வீரர்களுக் குப் போட்டிக்குப் பிந்திய பரிசு திட்டங்களில் வளங்களை அதிக மாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சிங்கப்பூர் விளையாட் டாளர்கள் குழு முழுமைக்கும் பரந்த அளவிலான, நிலையான, நன்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஆதரவு முறையை அமல்படுத்து வதில்தான் அரசாங்கம் ஒருமித்த கவனம் செலுத்துகிறது என்று கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரியோ டி ஜெனிரோ நகரில் சென்ற மாதம் நடந்த உடற் குறையாளர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனைகள் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண் கலப் பதக்கத்தையும் வென்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த் தார்கள். ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெறும் மற்ற விளையாட்டு வீர களுக்கு அளிப்பது போலவே இவர்களுக்கும் அதே அளவு பரிசுத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்று அண்மையில் குரல் எழுப்பப்பட்டது. நாடாளுமன்றத்தில் இது பற்றி பல உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். சிங்கப்பூரில் உடற்குறையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு எந்த அளவுக்கு, எந்த வகை ஆதரவு கொடுக்கப் படுகிறது என்பதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள அவர் கள் விரும்பினார்கள்.

உடற்குறை உள்ள நீச்சல் வீராங்கனைகள் யிப் பின் சியூ, தெரெசா கோ இருவரும் கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூவுடன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ
Gotabaya Rajapaksa has won the Sri Lankan presidency after a closely fought election

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

17 Nov 2019

தேர்தலில் வெற்றி; இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே