ஜூரோங் வெஸ்ட்டில் தீ: ஈரச் சந்தை சீர்குலைந்தது

ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் நேற்று விடியற்காலை மூண்ட தீயில் ஈரச் சந்தையும் காப்பிக் கடையும் சேதமுற்றன. புளோக் 493ல் நிகழ்ந்த இச்சம் பவம் குறித்து விடியற்காலை 2.45 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிட்டியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் கில் குறிப்பிட்டது. தொடர்ந்து, 4 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் 14 தீயணைப்பு வாகனங்களும் ஆதரவு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப் பட்டதாக அப்படை குறிப்பிட்டது.

ஈரச் சந்தை, காப்பிக் கடை ஆகியவற்றை தீ முழுவதுமாக சூழ்ந்துகொண்டு பற்றி எரிந்ததால் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் ஆறு வாகனங்கள் விரைந்து செயல்பட்ட தாகவும் வான் கண்காணிப்பு மூலம் தீயை அணைக்கப் போராடி யதாகவும் குடிமைத் தற்காப்புப் படை மேலும் தெரிவித்தது. சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் காலை 4.15 மணிக்கு தீ முற்றாக அணைக்கப்பட்டது. ஈரச் சந்தையின் கூரையைச் சேதப்படுத்தி அதற்கு மேல் தீ எரிந்ததால் பாதுகாப்புக் கருதி அக்கம்பக்கத்து புளோக்குகளில் வசிக்கும் 300 குடியிருப்பாளர்கள் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். போலிஸ், குடிமைத் தற்காப்புப் படை ஆகிய வற்றின் அதிகாரிகள் அந்தக் குடி யிருப்பாளர்களைப் பத்திரமாக வெளி யேற்றினர். தீ அணைக்கப்பட்டு வழக்கநிலை திரும்பியதும் படிப் படியாக குடியிருப்பாளர்கள் அவர் களின் வீடுகளுக்குத் திரும்பினர்.

தீப்பற்றிய இடத்தை நேற்றுக் காலையில் சுற்றிப் பார்த்த ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங், ஈரச் சந்தையில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு உதவிகள் செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சம்பவத்தில் யாருக் கும் காயமில்லை என்றபோதிலும் சுவாசப் பிரச்சினை காரணமாக 60 வயது மாது ஒருவர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். தீப்பற்றியதற்கான கார ணத்தை போலிசார் விசாரிக்கின் றனர். இதற்கிடையே, புளோக் 493ன் கட்டடத்தின் கட்டமைப்பு உறுதி யாக உள்ளதென்று அதனை நேற்று பிற்பகலில் சோதனையிட்ட கட்டட, கட்டுமான ஆணைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.

கடுமையாகப் பற்றி எரிந்த தீயினால் ஈரச் சந்தையின் கூரை சரிந்து பலத்த சேதமுற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

லோரோங் செசுவாயில் ஒரு காருக்குள் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாகவும் காருக்கு அருகில் 41 வயது மாது அசைவின்றிக் கிடந்ததாகவும் கூறப்பட்டது. படங்கள்: ஷின் மின்

14 Nov 2019

புக்கிட் தீமா தடைசெய்யப்பட்ட பகுதியில் சிறுவன், பெண் ஆகியோரது சடலங்கள்

பொதுவான நோக்கத்துடன் கடுமையான சூட்டுக் காயத்தால் சிறுவனைக் கொன்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அவனது பெற்றோர் அஸ்லின் அருஜுனா, அவரது கணவரான ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான். படம்: ஃபேஸ்புக்

14 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவனின் தாய்: ‘என் சிறிய உடலுடன் எப்படி ஒரு குழந்தையை நான் கொல்ல முடியும்?’