‘யுனிசிம்’ 6வதுதன்னாட்சிப் பல்கலைக்கழகமாகலாம்

தனியார் கல்விக் கழகமாக நடத்தப்பட்டு வரும் 'யுனிசிம்' எனும் 'சிம்' பல்கலைக்கழகம் சிங்கப் பூரின் ஆறாவது தன்னாட்சிப் பல்கலைக்கழகமாகலாம். அதன் தொடர்பில் கல்வி அமைச்சு சமர்ப்பித்திருக்கும் பரிந் துரை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் 'யுனிசிம்'முக்கு இந்த உயரிய அந்தஸ்து கிடைக் கக்கூடும். அப்படி என்றால் அரசாங்கத்தின் முழு நிதி ஆதர வும் 'யுனிசிம்'முக்குக் கிட்டும். நேற்று காலை நடைபெற்ற சிம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் இந்த விவரங்களை வெளியிட்டார்.

கல்வி அமைச்சு 'யுனிசிம்'மின் அறங்காவலர் குழுவிடமும் அதனை நிர்வகிக்கும் சிங்கப்பூர் நிர்வாகக் கழகத்தின் (எஸ்ஐஎம்) ஆளுமை மன்றத்துடனும் இது குறித்து கலந்தாலோசனை நடத்தி உள்ளது என்று குறிப்பிட்ட திரு ஓங், அனைவரும் இந்தப் பரிந்து ரைக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர் என்றும் இது 'யுனிசிம்' மின் 'மேம்பாட்டுக்கு நியாயமான, ஆக்கபூர்வமான அடுத்த படி' என்பதில் இணக்கம் கண்டுள்ள னர் என்றும் கூறினார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங் கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை தற்போதுள்ள ஐந்து தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள்.

"தன்னாட்சிப் பல்கலைக்கழகம் என்ற முறையில் கிளமெண்டி ரோட்டில் உள்ள 'யுனிசிம்', மாணவர்கள், கல்வி கற்கும் பெரியவர்கள் ஆகியோரை மைய மாகக் கொண்ட செயல்முறைக் கல்வியை வழங்கும் உன்னத பல்கலைக்கழகமாக விளங்கும்," என்றும் அமைச்சர் விவரித்தார். "சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் தொடர்பான செயல் முறைக் கல்வியைப் போதிப்பதில் கவனம் செலுத்துவதைப்போல 'யுனிசிம்' சமூக அறிவியலில் கவனம் செலுத்தி மாணவர்களை சமூகம் தொடர்பான பணிகளுக் குத் தயார் செய்யும்.

கிளமெண்டி ரோட்டில் உள்ள 'சிம்' பல்கலைக்கழகம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது பல்கலைக்கழகமானால் அதற்கு அரசின் முழு நிதி ஆதரவு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!