9 கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பதற்கான உரிமம் இடைநீக்கம்

தவ­றிழைத்த ஒன்பது சில்லறை விற்­பனைக் கடைக்­கா­ரர்­க­ளது புகை­யிலைப் பொருட்­கள் விற்கும் உரி­மத்தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி வைப்­ப­தாக சுகாதார அறி­வி­யல் ஆணையம் (எச்­எஸ்ஏ) அறி­வித்­துள்­ளது. புகை­யிலைப் பொருட்­களை 18 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்கு விற்கும் சட்­ட­வி­ரோ­தச் செயலைத் தடுக்­கும் நோக்கில் மேற்­கொள்­ளப்­பட்ட கண்­கா­ணிப்பு, அம­லாக்க நட­வ­டிக்கை­கள் ஆகி­ய­வற்­றின் வழியாக இந்த கடைக்­கா­ரர்­கள் பிடி­பட்­ட­தாக 'எச்­எஸ்ஏ' நேற்று குறிப்­பிட்­டது.

இந்த ஒன்பது கடை­களும் முதல்­முறை­யாக இந்த விதமான குற்­ற­மிழைப்­பவை. அவை:

* 132, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் இருக்­கும் 'குவான் ஜூ செங் மினி சூப்பர் மார்க்கெட்'

* 153, சிராங்­கூன் நார்த் அவென்யூ 1ல் இருக்­கும் '7=இலெவென்'

* 11A செம்ப­வாங் விஸ்­தா­வில் செயல்­படும் 'எஸ்­பி­எச் பஸ் பிரைவேட் லிமிடெட்'

* 174D ஹவ்காங் அவென்யூ 1ல் இருக்­கும் 'ரெயின்போ சூப்பர் மார்ட்'

* 112 பெண்டிங் ரோட்டில் செயல்­படும் மினி மார்க்­கெட்'

* 117 புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் இருக்­கும் 'ராஜா மினி மார்ட்'

* 845 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81ல் இருக்­கும் 'அன்பா பிரைவேட் லிமிடெட்'

* 105 புக்கிட் பாத்தோக் செண்ட்­ர­லில் இருக்­கும் 'K11 மினி­மார்ட்' * 182A ரிவர்­வேல் கிர­செண்­டில் இருக்­கும் 'M28 மினி­மார்ட்'

இந்த இடை­நீக்­கத்­தின்­படி மேற்­கு­றிப்­பிட்­டுள்ள கடைகள் ஆறு மாதங்களுக்கு புகை­யிலைப் பொருட்­களை விற்கத் தடை­ வி­திக்­கப்­பட்­டுள்­ளது. 2014ஆம் ஆண்டு முதல் 'எச்­எஸ்ஏ' 32 புகையிலை சில்லறை விற்பனை உரி­மங்களை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­த­து­டன் வேறு 20 கடை­களின் உரி­மத்தை மீட்­டுக்­கொண்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!