சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா இடையே விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம்

சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தின்கீழ் நேற்று நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கேன்பராவிலுள்ள நாடாளு மன்ற இல்லத்தில் பிரதமர் லீ சியன் லூங், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கும் இடை யிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதுடன் தற்காப்பு, அறிவியல் ஆராய்ச்சி, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஆகியவற்றிலும் இன்னும் அணுக்கமாக இணைந்து செயல் பட ஏதுவாக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரு நாட்டு நிறுவனங்களும் மற்றொரு நாட்டின் சந்தைகளுக் குள் அடியெடுத்து வைக்க அதிக வழிவகை செய்யும், சிங்கப்பூர் =ஆஸ்திரேலியா தடையற்ற வர்த்தக உடன்பாட்டின் மூன்றா வது மேம்பாட்டு அம்சம் அடுத்த ஆண்டு அமலாக இருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் கை யெழுத்திட்ட வர்த்தக, தொழில் அமைச்சர் (வர்த்தகம்) லிங் ஹங் கியாங், “சரக்குப் போக்குவரத்து, சேவைகள், முதலீடு ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம் இரு நாடு களுக்கு இடையே பொருளியல் உறவுகளை வலுவாக்க இரு நாட்டு அரசாங்கங்களும் கடப் பாடு கொண்டுள்ளதை இந்த ஒப்பந்தம் குறிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா இடையிலான தற்காப்பு ஒத்து ழைப்பும் மேம்படவிருக்கிறது. குறிப்பாக, 25 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் படைகள் பெரிய அளவிலான பயிற்சிக் களத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகை யில் $2.35 பில்லியன் மதிப்பில் ஒரு திட்டம் கையெழுத்தாகி உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்