‘சிங்கப்பூரர்கள்-குடியேறிகள் அதிகம் உறவாட வேண்டும்’

சிங்கப்பூரர்களும் புதிய குடிமக் களும் ஒருவர் மற்றொருவரை நல்ல முறையில் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கிடையில் கலந்துற வாடலை மேம்படுத்தவும் தேவை இருக்கிறது என்று சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார். ‘பிக் ஃபார்ம் பெருநடை மெது வோட்ட நிகழ்ச்சி’ நேற்று நடந்தது. அதில் திரு ஸாக்கி கலந்து கொண்டார். சிங்கப்பூரில் பன்மய மக்கள் வாழ்கிறார்கள். இதனைக் கருத் தில் கொண்டு பார்க்கையில் எல் லாரும் பிணைப்புமிக்கவர்களாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்க மேலும் புரிந்துணர்வுச் செயல்திட்டங்கள் தேவைப்படுவ தாக அவர் கூறினார்.

சுவா சூ காங், ஹோங் கா நார்த்தில் ஆண்டுதோறும் நடக் கும் இந்தப் பெருநடை மெது வோட்ட நிகழ்ச்சி, அக்கம்பக்க நல்லுறவைப் பேணி வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதன்முத லாக இந்த ஆண்டு ‘சூரியகாந்தி ஓட்டம்’ என்ற குழு ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் குழுவில் சிங்கப்பூரர்களும் புதிய குடிமக்களும் அங்கம் வகித்தனர். “பெரும்பாலான நேரங்களில் பொதுவான வாய்ப்புகள் நமக்கு தேவை. இந்த வாய்ப்புகள் மூலம் மக்களிடையே கலந்துறவாடல் பலப்படும். நம்மில் பலரும் பல பின்னணிகளை, பல இனங்களை, பல சமயங்களைச் சேர்ந்தவர்கள் என்பதே இதற்குக் காரணம்,” என்று ஸாக்கி கூறினார்.

சுவா சூ காங், ஹோங் கா நார்த் வட்டாரங்களில் நல்ல அண்டைவீட்டார் உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படும் வருடாந்திர நடை நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பாளர்களுடன் (இடமிருந்து) மார்சிலிங்- இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம், சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான லோ யென் லிங், அமைச்சர் கான் கிம் யோங், யீ சீ சியா, ஸாக்கி முகம்மது. படம்: பெரித்தா ஹரியான்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிறுவனின் தாய் அஸ்லின் அவனை துடைப்பத்தால் பலமுறை அடித்ததில் அவனது முழங்கால் சில்லு இடம் மாறியதையடுத்து, அவன் நொண்டியபடி நடக்க வேண்டியதாயிற்று. மாதிரி படம்: தி நியூ பேப்பர்

12 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு சிறுவன் கொலை; பெற்றோரிடம் விசாரணை

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள வீடுகளில் பெரும்பாலானவை ‘வன நகரமான’ தெங்காவில் அமைந்துள்ளன. படம்: வீவக/ஃபேஸ்புக்

12 Nov 2019

விற்பனைக்கு 8,170 ‘பிடிஓ’ வீடுகள்