மக்கள் விழிப்புடன் இருக்க வலியுறுத்து

சிங்கப்பூரர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, விழிப்புடனும் ஒற்றுமையுடனும் வலிமையுடனும் இருக்கவேண்டும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் வலியுறுத்தி இருக்கிறார். சிங்கப்பூர் போலிசாரும் ஆயுதப்படையினரும் இணைந்து நேற்று முன்தினம் காலை பத்து மணியிலிருந்து நேற்று அதி காலை 4 மணி வரை, அதாவது 18 மணி நேரம் பயங்கரவாத எதிர்ப்பு ஆயத்தநிலை பாவனைப் பயிற்சியை மேற்கொண்டனர்.

இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் இடம் பெற்ற இந்தக் கூட்டுப் பயிற்சி யில் 3,200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆயத்தநிலைப் பயிற் சியை நேரில் பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசினார் தேசிய பாதுகாப்பு அமைச்சரு மான திரு டியோ. "சிங்கப்பூர் கடந்த காலங் களில் கண்டிராத அளவிற்கு இந்த வட்டாரத்தில் பயங்கரவாத மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. சிங்கப்பூரர்கள் இந்த மிரட்டல் களைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்," என்று திரு டியோ அறிவுறுத்தினார்.

"பயங்கரவாதத் தாக்குதல் இங்கு நிகழும் பட்சத்தில் பாது காப்புப் படையினர் எவ்வளவு விரைவாக பதில் தாக்குதல் நடத்துகின்றனர் என்பதைப் பற்றிச் சிந்திக்காமல், பயங்கர வாதத் தாக்குதல் தொடங்கியதும் ஆரம்ப நிமிடங்களில் உங்களை, உங்களுடைய நண்பர்களை, உங்களைச் சுற்றியுள்ளோரைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய் கிறீர்கள் என்பது முக்கியம்," என்றார் அவர். கடந்த இரு நாட்களாக இடம் பெற்ற கூட்டு பாவனைப் பயிற்சி முக்கியமானது என்ற அவர், அது உள்துறைக் குழு, சிங்கப்பூர் ஆயுதப்படை உள்ளிட்ட பல அமைப்புகளை ஒருங்கிணைத் தது என்றும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையும் போலிசாரும் இணைந்து தெம்பனிஸ் சென்ட்ரலில் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு ஆயத்தநிலை கூட்டுப் பயிற்சியைத் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!