மூத்தோர் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்க புதிய மருத்துவ வசதிகள்

சிங்கப்பூரில் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் மேலும் 30,000 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார். "சிங்கப்பூரின் மக்கள்தொகை விரைவாக மூப்படைந்து வருகிறது. அவர்களில் பலர் நாள் பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களைக் கவனிக்கும் பொருட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கான தேவை கடந்த ஆண்டிலிருந்தே அதிகரித்துக்கொண்டு வருகிறது," என்றார் அவர்.

'சுகாதாரப் பராமரிப்புத் துறை யில் உற்பத்தித்திறன்' என்னும் தேசிய ஆய்வரங்கில் பங்கேற்றுப் பேசிய திரு கான், ஊழியர்களுக் கான தேவை குறித்து விளக் கினார். இந்த ஆய்வரங்கு மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை நடந்தது. "அடுத்தடுத்து வரவிருக்கும் கூடுதல் மருத்துவ வசதிகளைச் செயல்படுத்த, மூத்தோர் மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்கள், நன்கு பயிற்சி பெற்ற தாதி யர்கள் போன்றோர் உள்ளிட்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள்.

"புதிதாக ஆறு பலதுறை மருந்தகங்கள், 2,100 பொது மருத்துவமனைப் படுக்கைகள், சமூக மருத்துவமனை மற்றும் தாதிமை இல்லங்களின் 9,100 படுக்கைகள் ஆகியவற்றோடு பகல்நேரப் பராமரிப்பு, இல்லப் பராமரிப்பு போன்றவற்றில் உள்ள 7,600க்கும் அதிகமான இடங்கள் ஆகியன புதிதாக வரவிருக்கும் மருத்துவ வசதிகளுள் அடங் கும்," என்றார் திரு கான். இறுக்கமான வேலைச் சந்தை காரணமாக பராமரிப்பு ஊழியர்களுக்கான தேவை கூடியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், எல்லா வயதுப் பிரிவையும் சேர்ந்த சிங்கப்பூரர்கள் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு அழைக்கப்படுவதாகக் கூறினார். தற்போது ஊழியர் பற்றாக் குறையைச் சமாளிக்க மேலும் அதிகமான சிறப்பு மருத்துவர் களுக்கும் தாதியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவ தாகவும் அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!