மாநாட்டில் பயங்கரவாதிகள்: 185 பேர் பங்கெடுத்த பாவனைப் பயிற்சி

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் நேற்று பயங்கரவாதத் தவிர்ப்பு பாதுகாப்பு பயிற்சி நடந்தது. மூன்று துப்பாக்கிக்காரர்கள் அந்த மருத்துவமனையின் ஒரு கட்டடத்தில் நடந்த மருத்துவ மாநாடு ஒன்றில் கலந்துகொண்டவர்களைத் தாக்கினார்கள். பலரும் தப்பித்து அலறியபடி அரங்கத்திற்குள் ஓடினார்கள். சிலர் மேசைக்கு அடியில் பதுங்கிக் கொண்டார்கள். இப்படியொரு பாவனைப் பயிற்றி நேற்று நடத்தப்பட்டது. 'இதயத் துடிப்பு பயிற்சி' என்ற ஒரு செயல்திட்டத்தின் இந்த ஆண்டின் மூன்றாவது, கடைசிக் கட்டமாக பயிற்சி நடந்தது. எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் அந்தப் பயிற்சி அவசரகால ஆயத்த நிலையை மேம்படுத்து வதற்காக இடம்பெறுகிறது.

சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, பல தொகுதிகள், பல அமைப்புகளைச் சேர்ந்த 185 பேர் பயிற்சி யில் ஈடுபட்டிருந்தனர். துணைப் பிரதமரும் பொருளியல், சமூக கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் பயிற்சியை பார்வையிட்டார். துப்பாக்கிக்காரர் களை சிங்கப்பூர் போலிஸ் படையின் அவசரகால செயல் குழுக்களும் அக்கம்பக்க செயல்படைகளும் மடக்கின. மருத்துவர்கள், தாதியர்கள் பலருக்கும் முதலுதவி அளித்தனர். பயிற்சி தொடங்கியதற்கு முன்பாக அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்குப் பயிற்சி பற்றி எச்சரிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!