சிறப்புத் தேவைகள் பள்ளிகள் நான்குக்கு விருது

சிறப்புக் கல்வி கற்பிக்கும் ஆசிரி யர்களும் நான்கு சிறப்புப் பள்ளி களின் முதல்வர்களும் இவ் வாண்டு விருதுகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. சிறப்புத் தேவையுடயை மாண வர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியில் சிறந்த முறையில் பங் காற்றியதற்காக அவர்களுக்கு அந்த விருதுகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் சமூக சேவைகள் மன்றமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன. எட்டாவது ஆண்டாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிறப்புக் கல்வி ஆசிரியர் விரு துக்குக் கிடைக்கப்பெற்ற 156 பரிந்துரைகளில் மூவர் தேர்வு பெற்றனர். ‘ஏஎஸ்பிஎன்’ காத்தோங் பள்ளி யின் திருவாட்டி டே வான் டிங், ‘எவ்வா’ பள்ளியின் திருவாட்டி நோரிட்டா சானி, ‘கிரேஸ் ஆர்ச் சர்ட்’ பள்ளியின் எஸ்தர் குவான் ஹுவே சியேன் ஆகியோரே அந்த மூன்று ஆசிரியர்கள். சிறப்புப் பள்ளிகள் விருதான கல்வி அமைச்சு- தேசிய சமூக சேவைகள் மன்றத்தின் புத்தாக்க விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 16 பள்ளிகளில் நான்கு பள்ளிகள் தேர்வு பெற்றன.

‘ஏஎஸ்பிஎன் டெல்டா சீனியர்’ பள்ளி, ‘ஈடன்’ பள்ளி, ‘மெட்டா’ பள்ளி, ‘ரெயின்போ சென்டர்’ =யீ‌ஷூன் பார்க் பள்ளி ஆகிய வையே அவை. ‘ஏஎஸ்பிஎன் டெல்டா சீனியர்’ பள்ளி தனது 17 முதல் 18 வயது மாணவர்களுக்கான பாடத்திட்டத் தில் மாற்றங்களை அறிமுகப் படுத்தி, மாணவர்கள் சிரமமின்றி தங்கள் கல்விப் பாதையைக் கடக்க வழி வகுத்தது.

‘ஏஎஸ்பிஎன் டெல்டா சீனியர்’ பள்ளியில் புதிதாகத் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இளையர் மன்றத்தில் அந்தப் பள்ளியின் மாணவர்கள் சேர்ந்து முதலுதவித் திறன்களைக் கற்றுக் கொள்ளலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

லோரோங் செசுவாயில் ஒரு காருக்குள் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாகவும் காருக்கு அருகில் 41 வயது மாது அசைவின்றிக் கிடந்ததாகவும் கூறப்பட்டது. படங்கள்: ஷின் மின்

14 Nov 2019

புக்கிட் தீமா தடைசெய்யப்பட்ட பகுதியில் சிறுவன், பெண் ஆகியோரது சடலங்கள்

சிறுவனை அடைத்து வைத்த பூனைக் கூண்டு, அவன் மீது ஊற்றிய சுடுநீரைத் தயாரித்த மின்சாதனம். படங்கள்: நீதிமன்ற ஆவணங்கள்

14 Nov 2019

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவனின் தாய்: ‘என் சிறிய உடலுடன் எப்படி ஒரு குழந்தையை நான் கொல்ல முடியும்?’