டிரம்ப்: அமெரிக்காவை பெருமைமிக்க நாடாக்குவேன்

அமெரிக்காவின் 45வது அதிபராக டோனல்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டு அமெரிக்க அரசியலில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். கோடீஸ்வர சொத்து மேம் பாட்டு தொழிலதிபரும் தொலைக் காட்சிப் பிரபலமாகத் திகழ்ந்தவரு மான 70 வயது டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலை முடிவு செய்யும் மாநிலங்கள் என வர்ணிக்கப்படும் ஒஹையோ, வட கெரோலைனா, ஃபுளோரிடா போன்ற மாநிலங் களில் வெற்றி வாகை சூடினார்.

அமெரிக்க அரசியல் மரபு களை மீண்டும் மீண்டும் மீறிய பிரசாரத்தில் குடியரசுக் கட்சி யைச் சேர்ந்த திரு டிரம்ப், கருத் துக் கணிப்புகளை பொய்யாக்கி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி அறிவிப்பைத் தொடர்ந்து மக்களுக்கு நன்றி கூறி உரையாற்றிய ட்ரம்ப், "நான் அமெரிக்கர்கள் அனைவருக்கு மான அதிபராக இருப்பேன் என் பதை உறுதி கூறிக்கொள் கிறேன்," என்றார். தொடர்ந்து பேசிய டிரம்ப், "தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும் நமது இயக்கத்தின் பணி இப்பொழுது தான் தொடங்கியுள்ளது. "அமெரிக்க மக்களுக்காக நாம் உடனடியாக பணியாற்றப் போகிறோம். அந்தப் பணியின் முடிவில் நீங்கள் உங்கள் அதிபரைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளும் நேரம் வரும் என எதிர்பார்க்கிறேன்," என்று தமது வெற்றிக்கு வித்திட்டு அதிகார வர்க்கத்துக்கு எதிராக திரண்ட மக்கள் எழுச்சி பற்றி கூறினார்.

அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2017 ஜனவரி 20ம் தேதி அமெரிக் காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்பார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!