செலவுக்குப் பணமில்லாமல் பொதுமக்கள் தவிப்பு

பயன்பாட்டில் உள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று இந்திய அரசாங்கம் அறிவித்ததை அடுத்து கையில் இருக்கும் அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு இந்திய மக்கள் தவியாய்த் தவித்து வருகின்றனர். தானியக்க வங்கி இயந்திரங்கள் (ஏடிஎம்) நேற்றிலிருந்து திறக்கப்படும் என்று அறிவித்து இருந்ததால் அதிகாலையில் இருந்தே அந்த மையங்களில் பொதுமக்கள் வரிசை பிடித்துக் காத்திருந்தனர்.

வழக்கமாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் அடுக்கப்பட்டால் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 15= 20 லட்ச ரூபாயை வைக்க முடியும் என்றும் இப்போது 50, 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே அடுக்குவதால் ஓர் இயந்திரத்தில் ரூ.2 லட்சம் மட்டுமே வைக்கமுடிகிறது என்றும் சொன்னார் ஏடிஎம் இயந்திர ரொக்க நிர்வாக நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி. இதனால் ஏடிஎம் இயந்திரம் ஒன்றின் கொள்திறன் 10% அளவுக்குக் குறைந்துவிடுகிறது.

அவ்வியந்திரங்களில் நிரப் பப்படும் பணமும் உட னுக்குடன் காலியாகி விடுகிறது. அத்துடன், ஏராளமான ஏடிஎம் மையங்கள் நேற்றும் மூடப்பட்டு இருந்த தால் ஏழை, நடுத்தர மக்கள் அன்றாடச் செலவுக்குக்கூட பணமில்லாது திண்டாடி, புலம்பி வருகின்றனர். மேலும், 50,000 ஏடிஎம் மையங்களில் இன்னும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளே அப்புறப்படுத்தப்படவில்லை என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி கூறியது.

திருச்சியிலுள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் வரிசை பிடித்துக் காத்திருக்கும் மக்கள். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!