தர்மன்: வேலை வாய்ப்புகள் உள்ளன

சிங்கப்பூரில் ஆட்குறைப்பு பற்றிய கவலை ஒருபுறம் இருந்தாலும் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து இருந்து வருவதாக துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூரர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகள் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்றார் அவர். இருக்கும் வேலை வாய்ப்பு களைப் பெற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தில் கூடுதல் சிங்கப் பூரர்கள் இணையவேண்டும் என்று திரு தர்மன் வலியுறுத்தினார்.

தென் மேற்கு வட்டாரத்தில் நடத்தப்பட்ட வேலைச் சந்தையில் கலந்துகொண்டு பேசிய திரு தர்மன், தொடர்புள்ள கற்றல் வாய்ப்புகள் குறித்து சிங்கப்பூரர் களுக்கு ஆலோசனை வழங்கி உதவ பயிற்றுவிப்பாளர் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க இருப்பதாகக் கூறினார். பணிகளில் சிறந்து விளங்க சிங்கப்பூரர்கள் தங்கள் திறன் களைத் தொடர்ந்து மேம் படுத்துவது முக்கியம் என்று பொருளியல், சமூகக் கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் நினைவூட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!