மத்திய வர்த்தக வட்டாரத்தில் ‘விண்வெளி ஆய்வாளர்கள்’

'நாசா - ஒரு மனித சாகசம்' எனும் தலைப்பிலான விண்வெளி ஆய்வு தொடர்பான கண்காட்சி ஒன்று மரினா பே சாண்ட்ஸில் வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. விண்வெளி ஆய்வில் உலக நாடுகள், நாசா அடைந்துள்ள சாதனைகள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் விண்வெளி ஆய்வு தொடர்பான 200க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். ஜான் நூர்மினென் ஈவென்ட்ஸ் என்பவரால் உருவாக் கப்பட்ட இந்தக் கண்காட்சி முதன் முதலாக ஸ்டாக்ஹோமில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இது மாட்ரிட், இஸ்தான்புல், தோக்கியோ, பேங்காக், சோல், தைப்பே போன்ற நகரங்களை அடுத்து சிங்கப்பூரில் அமைக்கப் படுகிறது. இந்தக் கண்காட்சியை விளம்பரப்படுத்தும் விதமாக விண்வெளி ஆய்வாளர்கள்போல உடை அணிந்த சிலர் மத்திய வர்த்தக வட்டாரத்தில் நேற்று வலம் வந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!