தோ பாயோ உணவகத்தில் புகுந்த டாக்சி

பிரேடல் எம்ஆர்டி நிலையம் அருகே தோ பாயோ லோரோங் 1, புளோக் 107ல் அமைந்துள்ள 'தாய் லிலி' உணவகத்தில் டாக்சி ஒன்று புகுந்து விபத்துக்குள்ளானது. 61 வயதான டாக்சி ஓட்டுநர் ஆம்புலன்ஸ் மூலம் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று மாலை 5.19 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் வேறு யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை.

இரவு நேரத்திற்காக அப்போதுதான் அந்த உணவகம் திறக்கப்பட்டது என்றும் அதனால் வாடிக்கையாளர்கள் யாரும் அங்கு இல்லை என்றும் கூறப்பட்டது. விபத்துக்குள்ளான அந்த டாக்சி மாலை 6.50 மணியளவில் அங்கிருந்து இழுத்துச் செல்லப் பட்டது. அப்பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த இன்னொரு காரும் இந்த விபத்தில் சிக்கியதாக அறியப்படுகிறது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!