காரணம் தெளிவானதும் மீட்புப் பணி தொடங்கும்

கவச வாகனங்கள் ஹாங்காங் கில் தடுத்து வைக்கப்பட்டதன் காரணங்கள் தெளிவானதும் அவற்றை மீட்பதற்கான நடைமுறை களை சிங்கப்பூர் அரசாங்கமும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் தொடங்கும் என தற்காப்பு அமைச் சர் இங் எங் ஹென் தெரிவித் துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் ஏபி எல் கப்பல் நிறுவன அதிகாரிகள் ஹாங்காங் சுங்கத் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் அந்தச் சந்திப்பை அதிகாரிகள் அணுக்கமாகக் கண் காணிப்பார்கள் என்றும் நேற்றுக் காலை அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுவா சூ காங் ராணுவ முகாமில் 'ஏரோஸ்டேட்' கண்காணிப்பு சாதனத்தை சோதிக்கும் நிகழ்வில் பங்கேற்க அவர் வந்திருந்தார். இச்சந்திப்பின் விவரங்கள் வெளிவந்ததும் அடுத்தகட்ட நட வடிக்கை பற்றி அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் திரு இங் குறிப்பிட்டார்.

வான்வெளியிலும் கடலிலும் எழும் மிரட்டலைக் கண்டறியும் திறன்பெற்ற 'ஏரோஸ்டேட்' சாதனத்தின் முன்பாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் அதிகாரிகளும். பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பூர் ஆயுதப்படை பலூன் போன்ற இந்தச் சாதனத்தை சோதித்து வருவதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!