கடலென திரண்டு கண்ணீர் அஞ்சலி

"மக்களுக்காக நான் மக்களால் நான்," என்று முழங்கி, தமிழக அரசியல் வானில் கிட்டத்தட்ட 26 ஆண்டு காலம் துணிச்சல் மிகுந்த தலைவியாக வலம் வந்த ஜெயலலிதா,68, மறைந்துவிட்டார். சென்னை மெரினா கடற் கரையில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 'அம்மா' என்று அதிமுகவின ரால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா மறைவால் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது.

பல்வேறு ஊர்களில் இருந்தும் சென்னைக்குப் படை யெடுத்து வந்த பல்லாயிரக்கணக் கான மக்கள் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி அரங்கை நோக்கிச் சென்றனர். கிட்டத்தட்ட 50 அடி தூரத்தில் உறங்குவதுபோல் கிடத்தி வைக் கப்பட்டு இருந்த ஜெயலலிதா உடலைப் பார்த்து கண்ணீர் வடித்தும் கதறியும் பலர் அழுதனர். இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற வரிசையில் பல பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் போலிஸ் உதவியுடன் மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். சென்னை நகரில் அசம்பா விதம் ஏற்படாதவாறு சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட கிட்டத் தட்ட 20,000 போலிசார் குவிக்கப் பட்டு இருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!