4ஆம் முனையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன

சாங்கி விமான நிலைய நான்காம் முனையத்தின் கட்டுமானப் பணி கள் நிறைவடைந்து விட்டன என் றும் அடுத்த ஆண்டு பிற்பாதியில் அது செயல்படத் தொடங்கும் என்றும் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது. வெளிப்புறக் கட்டுமானங்கள் முடிவடைந்துள்ள வேளையில் இனி கட்டடத்தின் உள் கட்டுமா னப் பணிகளில் கவனம் செலுத் தப்படும் என்றும் குழுமம் நேற்று கூறியது. நான்காம் முனையத்தின் கட்டு மானப் பணிகள் 2014ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட் டன. இரண்டு மாடிகள் கொண்ட பயணிகள் முனையக் கட்டடத்து டன், 1,700 கார்களை நிறுத்தக் கூடிய வசதிகொண்ட இரண்டு மாடி கார் பேட்டை, இரண்டு மாடி டாக்சி காத்திருக்கும் பகுதி, ஏர்போர்ட் பொலுவார்ட் சாலையைக் கடந்து செல்லும் மூன்று வெவ் வேறு வாகனம் மற்றும் பாதசாரி பாலங்களும் கட்டப்பட்டன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே நான்காம் முனையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன. அதன் கட்டுமானப் பணிகளில் 4,000 ஊழியர்கள் வரை ஈடுபட்டனர். படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!