விரைவுச்சாலையில் விபத்து; ஆடவர் பலி, நால்வர் காயம்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் 37 வயது காரோட்டி ஒருவர் மாண்டார்; நால்வர் காயமடைந்தனர். துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில், துவாஸ் வெஸ்ட் ரோட்டிற்கு அருகே, மெர்சிடிஸ் கார் ஒன்று போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் சென்ற தால் பெரும் விபத்து ஏற்பட்டதாக 'பே சியா லோர்' எனும் சாலைப் பாதுகாப்புக் குழுவின் ஃபேஸ்புக் பக்கம் கூறியது. துவாசுக்குச் சென்று கொண்டிருந்த கிராப் கார் ஓட்டுநர் லிம் வீ டெக், 51, விபத்தை நேரில் கண்டதாகக் கூறினார்.

"வாகனங்கள் மோதியதால் பெரும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து புகை கிளம்பியது; உடைந்த பாகங்கள் பறந்து சாலையில் விழுந்தன. மெர்சிடிஸ் கார் ஓட்டுநர் போக்குவரத்துக்கு எதிர்த் திசை யில் கார் ஓட்டினார்," என்றார் திரு லிம். மெர்சிடிஸ் காரின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததாகவும் அது வெடித்துவிடுமோ என்று தாங்கள் பயந்ததாகவும் அவர் சொன்னார். தமது காருக்குப் பின்னால் நின்றிருந்த பேருந்துகளில் இருந்து நான்கு தீயணைப்பான்களைப் பெற்று தீயை அணைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விபத்தில் நான்கு கார்களும் ஒரு மோட்டார்சைக்கிளும் ஒரு பேருந்தும் சம் பந்தப்பட்டதாக போலிஸ் கூறியது. இத னால், சாலையில் சிறிது தூரத்திற்கு வாக னங்களின் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடந்ததைக் காண முடிந்தது.

நான்கு கார்களும் ஒரு மோட்டார்சைக்கிளும் ஒரு பேருந்தும் சம்பந்தப்பட்ட இந்த விபத்திற்கு 53 வயது ஆடவர் ஒருவர் கவனக்குறைவாக காரோட்டியதே காரணம் எனக் கூறி, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!