பேசிக்கொண்டிருந்த ரஷ்யத் தூதரை போலிஸ்காரரே சுட்ட அதிர்ச்சி

துருக்கிய தலைநகர் அங்காராவில் உரையாற்றிக் கொண்டிருந்த ரஷ்யத் தூதரை அந்த நாட்டுப் பாதுகாவலர் சுட்டுக்கொன்ற சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்காராவின் கண்காட்சிக் கூடத்தில் நடந்த அந்நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் கண்முன்னால் நிகழ்ந்த கோர கொலையை கண்டு உறைந்து போயினர். ரஷ்யத் தூதரான திரு ஆண்ட்ரே கார்லோவ் ரஷ்யாவைப் பற்றிய புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த் திக்கொண்டிந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் நன்கு சவரம் செய்த முகத்துடன் கறுப்பு நிற கோட்டும் டையும் அணிந்து பாதுகாவலரைப் போல் அமைதியாக நின்றுகொண்டிருந்த துருக்கி போலிஸ்காரன் தனது கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டான். குண்டுபாய்ந்து பின்புற மாக ரஷ்ய தூதர் சாய்ந்துவிழுந்தார். சம்பவம் நடந்து சில நிமிடங் களுக்குப் பின்னர், தூதர் தரையில் சரிந்து கிடக்கும் நிலையில், மிரண்டு போயிருந்த பார்வையாளர் களை நோக்கி துப்பாக்கியை நீட்டி ஒரு விரலை வானத்தைச் சுட்டி முன்னும் பின்னும் அவன் நடந்து கொண்டிருந்தான்.

சுடப்பட்டு விழுந்து கிடக்கும் ரஷ்ய தூதர். அருகில் தூதரைச் சுட்ட துருக்கிய போலிஸ்காரன். இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!