அப்பர் தாம்சன் ரோடு கடைகளில் வெள்ளம்

காரணமாக சரக்கு களும் சாதனங்களும் சேதம் அடைந்துவிட்டன. ஆயிரக்கணக் கான வெள்ளி இழப்பு ஏற்பட்டு விட்டது. கிறிஸ்துமஸ் நாளுக்கு முதல் நாளன்று மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இத னால் அப்பர் தாம்சன் ரோட்டில் இருக்கும் தி ரொட்டி பரோட்டா ஹவுஸ் கடையில் தண்ணீர் புகுந்து வெள்ளம் ஏற்பட்டது. வெள்ள நீருடன் மண்ணும் புழுப்பூச்சிகளும் கடைக்குள் நுழைந்தன. அதே சாலையில் அமைந்துள்ள ஐஸ்கிரீம் கடை ஒன்றில் ஏறக்குறைய $3,000 மதிப்புள்ள ஐஸ்கிரீம் வீணாகி விட்டது. பக்கத்தில் இருக்கும் டயர் கடை ஒன்றில் சாதனங்கள் கெட்டுப்போய்விட்டதால் ஆயிரக் கணக்கான வெள்ளி இழப்பு ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப் பட்டது. வெள்ளம் காரணமாக அப்பர் தாம்சன் ரோட்டில் இருக்கும் சுமார் எட்டுக் கடைகள் பாதிக்கப்பட்டன.

அப்பர் தாம்சன் ரோட்டில் இருக்கும் தி ரொட்டி பரோட்டா ஹவுஸ் கடை வெள்ளம் காரணமாக பாதிக்கப் பட்டது. படம்: ரிஜ்வான் சையது

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!