அதிமுகவின் அதிகாரபூர்வ தலைவரானார் சசிகலா

தமிழகத்தின் ஆளுங் கட்சியான அதிமுக வின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராகவும் தமிழக முதல்வராக வும் இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, புதிய பொதுச் செயலா ளாரைத் தேர்வு செய்ய அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்றுக் காலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செய லாளராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய் யப்பட்டார். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்ற மிக முக்கிய தீர்மானத்துடன் மொத்தம் 14 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் பன்னீர்செல்வமும் தம்பிதுரை யும் போயஸ் கார்டன் சென்று சசிகலாவிடம் தீர்மான நகலை நேரில் வழங்கினார்கள். அடுத்து, தீர்மான நகலை ஏற்றுச் செயல் பட சசிகலா சம்மதம் தந்துள்ளதாக முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அதேநேரத்தில், வானகரத்தில் நடைபெற்ற பொதுக் குழுவில் 'சின்னம்மா' சம்மதம் தெரிவித்தார் என அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் ஒரு மணி நேரம் திட்டமிடப்பட்டிருந்த பொதுக் குழுக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. தீர்மான நகலைப் பெற்ற சசிகலா வானகரம் வந்து நன்றி கூறுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் வரவில்லை. பொதுக் குழு கூட்டத்திற்கு சசிகலா எதிர்ப்பாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

அதிமுக பொதுச்செயலாளராக தன்னைத் தேர்வு செய்ததற்கான தீர்மான நகலை முதல்வர் பன்னீர்செல்வத்திடமிருந்து பெற்ற சசிகலா, அதனை ஜெயலலிதா படத்தின் முன் வைத்து கண்கலங்கினார். படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!