சிங்கப்பூர் இந்தியர் சங்கத்திற்கு விருது

ப. பாலசுப்பிரமணியம்

வெளிநாட்டுவாழ் இந்தியர்களைக் கெளரவிக்கும் இந்தியாவின் உயரிய 'வெளிநாட்டுவாழ் இந்தியர் விருது (பிரவாசீ பாரதீய சம்மான்)' சிங்கப்பூர் இந்தியர் சங்கத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரஃப், நேற்று சிங்கப்பூர் இந்தியர் சங்கத்திற்கு வருகையளித்த போது இதை அறிவித்தார். 'வெளிநாட்டுவாழ் இந்தியர் தின' மாநாட்டின் ஓர் அங்கமாக 2003 முதல் இவ்விருது வெளிநாட்டுவாழ் இந்தியர் அல்லது அவர்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை 9ஆம் தேதி பெங்களூரில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து இவ்விருதைப் பெற்றுக்கொள் வார் சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவர் திரு கே. கேசவபாணி. "சிங்கப்பூருக்கு வரும் இந்தியர் களைச் சமூகத்தில் ஒரு பங்காக அர வணைப்பதோடு சமூகத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கும் தோள்கொடுத்து உதவுகிறது சிங்கப்பூர் இந்தியர் சங்கம்," என்றார் திரு அஷ்ரஃப். சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் அமரர் திரு எஸ்.ஆர். நாதனுக்கு 2012ஆம் ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரஃபுக்கு (இடது) தமது சுயசரிதையை நினைவுப் பரிசாக அளித்தார் முன்னாள் சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் (இடமிருந்து 2வது). உடன் புத்தக ஆசிரியர் நிலஞ்சனா செங்குப்தா (வலமிருந்து 2வது), சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவர் கே. கேசவபாணி. படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!