கப்பல்கள் மோதலால் எண்ணெய்க் கசிவு

ஜோகூரில் இரு கொள்கலன் கப்பல்கள் மோதிக்கொண்டதால் கடலில் கசிந்த எண்ணெய் சிங்கப்பூர் கடலோரப் பகுதிக்குள் புகுந்தது. சாங்கி கடற்கரைப் பூங்கா உட்பட சிங்கப்பூரின் வடகிழக்குக் கடலோரப் பகுதியில் உள்ள பூங்காக்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளன. கடற்கரையிலும் கரையை ஒட்டிய கடல்பரப்பிலும் கருமை நிறத்தில் எண்ணெய்த் திட்டுகள் தென்பட்டன. தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஒப்பந்ததாரர்கள் நேற்றுக் காலை எண்ணெய் உறிஞ்சிகள் மூலம் நீரில் மிதந்த எண்ணெய்யை உறிஞ்சி படகுகளில் சேர்த்த தையும் எண்ணெய் படிந்திருந்த கடற்கரை மணலை அள்ளி அவற்றைப் குப்பைப் பைகளில் சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததையும் காண முடிந் தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தள்ளி இருக்குமாறு எச்சரிக்கை அறி விப்புப் பலகைகள் வைக்கப்பட் டன. சாங்கி கடற்கரையின் 800 மீ. நீளப் பகுதி தற்காலிகமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டது.

சாங்கி படகுத்துறை அருகே கடல்நீரில் கலந்துள்ள எண்ணெய்யை 'எண்ணெய் உறிஞ்சி' மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிங்கப்பூர் எண்ணெய்க் கசிவு மீட்பு மைய ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!