கட்டுமானத் துறையைத் தூக்கி நிறுத்த $24 பி

சிங்கப்பூரின் கட்டுமானத் துறை யை 24 பில்லியன் வெள்ளி வரை பெறுமானமுள்ள அரசாங்கத் துறை திட்டங்கள் தூக்கி நிறுத்த இருக்கின்றன. இதன் மூலம் கடந்த ஆண்டில் மந்தமாக இருந்த கட்டுமானத் துறை இந்த ஆண்டு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 15.8 பில்லியன் வெள்ளியாக இருந்த அரசாங்கத் துறையின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டில் 24 பில்லியன் வெள்ளி வரை உயரலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள தாகக் கட்டட, கட்டுமான ஆணையம் கூறியது. இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் அரசாங்கத் துறைக்கான கட்டுமானப் பணிகளில் ஆழ் சுரங்க கழிவுநீர் திட்டத்துக்கான இரண்டாவது கட்டப் பணிகள், வடக்கு-தெற்குத் தடம்,

ஆறாவது வட்டப் பாதை ஆகியவை அடங் கும். கட்டுமானத் துறையைத் தூக்கி நிறுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நேற்று நடைபெற்ற கட்டட, கட்டுமான ஆணையம்=சிங்கப்பூர் நிலச் சொத்து மேம்பாட்டாளர்கள் சங்கம் நடத்திய கருத்தரங்கில் உள்துறை, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்தார். திறன்கள், புத்தாக்கம், உற்பத்தித் திறன் ஆகியவற்றுக் கான மன்றத்தின்கீழ் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்ற குழுமத் துக்கான துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் திரு லீ அறிவித்தார். இந்தத் துணைக் குழுவுக்குத் திரு லீயும் கெபிடாலேண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லிம் மிங் யானும் பொறுப்பேற்க இருக்கின்றனர்.

ஓவியர் கைவண்ணத்தில் வடக்கு - தெற்குத் தடம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!