தொடங்கியது மங்கல பொங்கல் கொண்டாட்டம்

சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட் டம் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. லிட்டில் இந்தியாவில் உள்ள கேம்பல் லேனில் அமைக்கப்பட்ட பிர தான மேடையில் சிறப்பு விருந்தின ராக வந்திருந்த பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் விசையை அழுத்தி பொங்கல் ஒளி யூட்டைத் தொடங்கி வைத்தார். அனைத்து வயதினரையும் கவ ரும் விதமாக நேற்று முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சி களும் நடவடிக்கைகளும் கேம்பல் லேனிலும் ஹேஸ்டிங்ஸ் சாலையிலும் நடைபெறும். மேலும் பொங்கல் பாரம்பரியத் தைப் புரிந்துகொள்ள உதவியாக 'பொங்கல் பாரம்பரிய சுற்றுலா'வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை பல தரப்பினரையும் கவரும் ஆடுகள், மாடுகள், கன்றுகள் கொண்ட விலங்குப் பண்ணையுடன் பல கவ ரும் அம்சங்களை லிட்டில் இந்தியா பொங்கல் கொண்டாட்டங்களில் கண்டு களிக்கலாம்.

பொங்கல் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைக்கும் ஒளியூட்டு விழாவில் நேற்று பங்கேற்ற பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் அங்கிருந்த ரங்கோலி கோலத்தை முடித்து வைக்கிறார். அமைச்சருக்குப் பக்கத்தில் நிற்பவர் லிஷாவின் தலைவர் ராஜ்குமார் சந்திரா. படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!