தமிழகத்துக்கு தண்ணீர்; பன்னீர்செல்வம் முயற்சி வெற்றி

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண் ணீர் வழங்க ஆந்திர அரசு ஒப்பு தல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை யில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆந்திர தலைநகர் அமராவதி யில் சந்திரபாபு நாயுடுவுடன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் தண்ணீர் வழங்க ஆந்திர அரசு சம்மதம் தெரிவித்த தாக அதிகாரிகள் கூறினர். பராமரிப்புத் தொகை 433 கோடி ரூபாய் ஒதுக்குவது குறித்து அடுத்த வாரம் திருப்பதி யில் இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணாநதி நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப்போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. இதுவரை யாரும் எடுக்காத முயற்சியாக முதல்முறையாக ஆந்திராவுக்கு நேரில் சென்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய பேச்சுக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!