வீடுகள் மீது விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்; 37 பேர் மரணம்

துருக்கிய சரக்கு விமானம் ஒன்று கிர்கிஸ்தான் நாட்டில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 37 பேர் மாண்டனர். அந்த போயிங் 747 விமானம் ஹாங் காங்கில் இருந்து கிளம்பி இஸ்தான்புல் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இடையில் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்குக்கு அருகேயுள்ள மனாஸ் விமான நிலையத்தில் அது தரையிறங்கு வதாக இருந்தது. அதன்படி, நேற்றுக் காலை 7.31 மணிக்கு அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது கடும் பனிமூட்டம் கார ணமாக அருகில் இருந்த டச்சா-சூ கிராமத்தில் விழுந்து நொறுங்கியது. விழுந்த விமானம், அந்தக் கிராமத் தில் சில நூறு மீட்டர் தூரம் ஓடியதாகவும் அதனால் கிட்டத்தட்ட பதினைந்து கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்த தாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 37 பேர் மரணம் அடைந்ததாக தொடக்க மதிப்பீடுகள் கூறுகின்றன என்று கிர்கிஸ்தான் நெருக்கடிகால அமைச்சரவைத் தகவல் தெரிவித்தது. விமானத்தில் குறைந்தது நான்கு விமானிகள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் பலியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானம் துருக்கி நாட்டின் சரக்கு விமானப் போக்குவரத்து நிறு வனமான ஏசிடி ஏர்லைன்சுக்குச் சொந்தமானது. "பிஷ்கெக்கில் தரையிறங்க முயன்ற அந்த விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானது. இதற்கான காரணம் தெரியவில்லை," என்று ஏசிடி ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்தபோது மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தனர் என்றும் பல குடும்பங்களில் ஒருவர்கூட உயிர் தப்பவில்லை என்றும் உள்ளூர்வாசி ஒருவர் சொன்னதாக ஏஎஃப்பி செய்தி கூறியது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!