தமிழகம் முழுக்க விஸ்வரூபம் எடுக்கும் ஜல்லிக்கட்டுப் போர்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட் டிக்கு ஆதரவான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அலங்காநல்லூரிலும் சென் னையிலும் இளையர்கள் பெருமள வில் திரண்டு போராட்டம் நடத் திய வேளையில் நேற்று கல்லூரி மாணவர்களும் அவர்களோடு கை கோர்த்தனர். ஜல்லிக்கட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தடை நீக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு உடனடியாக நடத்தப்பட வேண் டும், 'பீட்டா' என்ற அமைப்பு இந்தியாவிலிருந்து துரத்தப்பட வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் ஒன்றுதிரண்டு உறுதியாக நிற்கின்றனர். இந்தக் கோரிக்கைகளை நேற்றுக் காலை 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்னையில் ஒன்றுதிரண்டனர். இவர்கள் சென்னை விருகம்பாக்கத்தி லிருந்து கடற்கரை வரை ஊர்வல மாகச் சென்று ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அரசியல் தலையீடு இன்றி இப்படி ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தை இதற்கு முன் தமிழகம் கண்டதில்லை என் பதால் இது ஒரு வரலாற்று நிகழ் வாகவே மாறியுள்ளது. இளையர்களும் மாணவர் களும் திரண்டிருக்கும் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த அரசியல்வாதிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். சென்னை கடற்கரையில் போராட்டக்காரர்களைச் சந்திக்க முயன்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் அலங்காநல்லூர் போராட்டத்தை ஆதரிக்கச் சென்ற சமக தலைவர் சரத்குமாரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருநெல்வேலி, விருதுநகர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ் ணகிரி, கோயம்புத்தூர், திண்டுக் கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி என பல மாவட்டங்களில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பெரும்பாலும் அமைதி வழிப் போராட்டமாகவும் சில இடங்களில் சாலை மறியலாகவும் நடத்தப்பட்டு வருகிறது. எல்லா இடங்களிலும் ஆயி ரத்துக்கு மேற்பட்ட இளையர்கள் திரண்டு ஜல்லிக்கட்டு என்னும் தமிழர் பாரம்பரிய உரிமையை அடைந்தே தீருவோம் எனும் உறுதி யுடன் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் நேற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!